'முதுமையில் தாக்கிய கொரோனா வைரஸ்’... ‘ஐசியூவில் பரிவுடன் கலந்த’... ‘கண்ணீர் வரவழைக்கும் வார்த்தைகள்’... ‘இதயத்தை உருக்கும் வீடியோ’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Feb 05, 2020 02:29 PM

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதிய தம்பதி, மருத்துவமனையில் ஒருவொருக்கொருவர் சொல்லும் வார்த்தைகள்  நம் மனதை கலங்க வைத்துள்ளது. அந்த 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி பலரையும் உருக வைத்துள்ளது.

Elderly Couple Infected by Coronavirus, GoodBye Video Viral

கொரோனா வைரஸ் சீனாவை மட்டுமல்லாமல் உலகில், 28 நாடுகளை மிரட்டி வருகிறது . உகான் நகரத்தை மையமாகக் கொண்ட கொரோனா வைரஸ் பாதிப்பால், சீனாவில் பலி எண்ணிக்கை 490-ஐ தொட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில், மருத்துவமனை ஒன்றின், ஐ.சி.யு., வில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 80 வயதான முதிய தம்பதி சிகிச்சையில் உள்ளனர். வயதான பெண்மணி மிகவும் பலவீனமாக நிலையில், சுவாசிக்கக் கூட அவரால் முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்.

அருகருகே இருக்கும் இவர்கள், ஒருவருக்கொருவர் 'இதுதான் நம் கடைசி சந்திப்பு, குட் பை' என தெரிவிக்கின்றனர். இந்த வீடியோ, 'கணவன் - மனைவி என்றால் என்ன அர்த்தம்? 80 வயதில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு வயதான நோயாளிகள், ஐசியூவில் குட் பை சொல்லிக்கொண்டனர். ஏனெனில், இதுதான் அவர்கள் சந்தித்து வாழ்த்துவதற்கான கடைசி நேரமாக இருக்கலாம்’ என்ற தலைப்பில், 'ட்விட்டரில்' வெளியிடப்பட்டு இது பலரின் இதயத்தை உருக வைத்துள்ளது.

Tags : #CHINA #CORONAVIRUS #ELEDERLY COUPLE #ICU #HOSPITAL #GOODBYE