கொரோனா 'வைரஸ்' பாதிப்புடன்... 'சென்னை' கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்... 'சிகிச்சை' பெறும் நபர்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மாடம்பாக்கத்தை சேர்ந்த காசிராஜன்(40) என்பவர் வேலைநிமித்தம் காரணமாக அடிக்கடி சீனா சென்று வருவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் 14-ம் தேதி சென்னையில் இருந்து சீனா சென்று 22-ம் தேதி அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை வீட்டில் வைத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் அவருக்கு சளி,இருமல் தொல்லை ஏற்பட்டுள்ளது. அத்துடன் காய்ச்சலும் இருந்துள்ளது.
இதையடுத்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். காசிராஜனை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்பதை அறிய அவரது சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
