ஓடுதளத்திலிருந்து விலகிய விமானம்.. விமான நிலையத்தில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Apr 30, 2019 11:30 AM
சீரடி விமான நிலையத்தில், ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று, ஓடுதளத்திலிருந்து விலகி ஓடியதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில், உள்ள சீரடி விமான நிலையம், கக்காடி என்னும் கிராமப் பகுதியின் அருகே அமைந்துள்ளது. திங்களன்று மாலை 189 பயணிகளுடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று, டெல்லியிலிருந்து சீரடி விமானநிலையத்தில் தரையிறங்க வேண்டிய வந்தது.
அப்போது எதிர்பாரதவிதமாக, ஸ்பைஸ்ஜெட் விமானம் ஓடுதளத்தில் தரையிறங்க வேண்டிய புள்ளியிலிருந்து, 30-40 மீட்டர் தள்ளிச்சென்று தரையிறங்கியது. இதனால் பெரும் பதற்றம் நிலவியது. ஆனாலும், பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி விமானத்திலிருந்து தரையிறக்கப்பட்டனர்.
ஸ்பைஸ்ஜெட் விமானம் தாமதமாக வந்ததால் சில குளறுபடிகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டு, மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரடி விமானநிலையம், கடந்த 2017-ம் ஆண்டுதான் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் திறக்கப்பட்டது. தற்போது சீரடி விமான நிலையம் மஹாராஷ்டிரா விமான நிலைய வளர்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.