‘என்னுடைய இதயம் கனமாக உள்ளது’... ‘கோப்பை கனவை தகர்த்த அந்த 30 நிமிடங்கள்'... 'ட்விட்டரில் உருகிய வீரர்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 12, 2019 07:08 PM

அரையிறுதி தோல்வி குறித்து இந்திய அணியின் ரோகித் சர்மா வருத்தமான பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Rohit Sharma says My heart is heavy as I\'m sure yours is too

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடர் குறித்து ட்விட்டர் ஒன்றை பதிவு செய்துள்ளார் ரோகித் சர்மா. அதில் அவர் கூறியதாவது, ‘நாங்கள் முக்கியமான நேரத்தில் ஒரு அணியாக சாதிக்க தவறிவிட்டோம். அரையிறுதிப் போட்டியில் முதல் 30 நிமிடங்கள் ஆட்டத்தை புரட்டிப்போட்டுவிட்டது. அதுவே உலகக் கோப்பை பெறுவதற்கான வாய்ப்பை எங்களிடமிருந்து பறித்துவிட்டது.

என்னுடைய இதயம் இப்போது கனமாக உள்ளது. உங்களுக்கும் அப்படி தான் இருக்கும் என்று எனக்குப் புரிகிறது. இந்திய ரசிகர்கள் அனைவரும் எங்களுக்கு, இங்கிலாந்தில் நாங்கள் எங்கு சென்றாலும் விளையாடினாலும், நீல நிறமுடைய உடையோடு மைதானத்தை நிரப்பி, எங்களுக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி என்று உருக்கமுடன் ரோகித் சர்மா பதிவிட்டுள்ளார்.