‘2020ஆம் ஆண்டு மட்டும்’.. ‘புதிதாக 23 ஆயிரம் பேருக்கு வேலை’.. ‘பிரபல ஐடி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு’..
முகப்பு > செய்திகள் > வணிகம்By Saranya | Nov 09, 2019 09:12 PM
காக்னிசன்ட் நிறுவனம் 2020ஆம் ஆண்டு புதிதாக 23,000 பேரை வேலைக்குச் சேர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
பிரபல ஐடி நிறுவனமான சிடிஎஸ் எனப்படும் காக்னிசன்ட் நிறுவனம் 18000 பேரை வேலையில் இருந்து நீக்கம் செய்ய உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்நிறுவனம் புதிதாக 23,000 பேரை வேலைக்கு சேர்க்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (இந்தியா) ராம்குமார் ராமமூர்த்தி, “2020ஆம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 23,000க்கும் மேற்பட்ட STEM (Science, Technology, Engineering, Mathematics) துறை சார்ந்த பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்த உள்ளோம். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 66,000 ஊழியர்களை வேலைக்குச் சேர்த்துள்ளோம். இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் 9,000 ஊழியர்களை வேலைக்குச் சேர்த்துள்ளோம்.
அதே நேரம் வரவிருக்கும் காலாண்டில் தற்போது வேலை செய்து வருபவர்களில் நடுத்தர மற்றும் மூத்த மட்டம் வரை சுமார் 5000 முதல் 7000 பேரை வேலையில் இருந்து நீக்கம் செய்வதென கடினமான முடிவை எடுத்துள்ளோம். இது மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் வெறும் 2 சதவிகிதம் மட்டுமே” எனத் தெரிவித்துள்ளார்.