நள்ளிரவு வீட்டுக்குள் இருந்து வந்த புகை.. பதறிப்போய் போலீஸிக்கு தகவல் கொடுத்த அக்கம்பக்கத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருவனந்தபுரம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் தளவபுரம் வர்கலா நகரை சேர்ந்தவர் பிரதாபன் (வயது 62). இவர் அப்பகுதியில் உள்ள புத்தன் சந்தையில் காய்கறி கடை நடத்தி வந்துள்ளார். இவர் தனது மனைவி செர்லி (வயது 54), மூத்த மகன் அகில் (வயது 26), மருமகள் அபிராமி (வயது 24) மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், பிரதாபன் வீட்டில் இருந்து நள்ளிரவு கரும்புகை வெளியேறியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்துள்ளனர். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பிரதாபன் அவரது மனைவி செர்லி, மகன் அகில், மருமகள் அபிராமி மற்றும் 8 மாத குழந்தை என 5 பேரும் தீயில் கருகிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கி அவர்களது வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. முதல்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்துக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீ விபத்தில் பச்சிளம் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
