"எங்க வீட்டுக்கு வார்னே வந்தப்போ.. அவருக்கு புடிக்காத ஒண்ண பண்ணிட்டோம்.." மனம் திறந்த சச்சின்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த வெள்ளிக்கிழமையன்று, தாய்லாந்தில் விடுமுறையை கழிக்க சென்றிருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே, மாராடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
திடீரென நிகழ்ந்த வார்னரின் மறைவு, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
உருகும் முன்னாள் வீரர்கள்
மேலும், அவருடன் கிரிக்கெட் ஆடிய ஆஸ்திரேலிய மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் சோகத்தில் உறைந்து போயினர். வார்னேவுடனும், வார்னேவுக்கு எதிராக ஆடிய போதும் நிகழ்ந்த பல அழகான தருணங்களையும் முன்னாள் வீரர்கள் உருக்கத்துடன் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
வார்னே டாக்குமெண்டரி
இந்நிலையில், வார்னே குறித்து சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்த கருத்து தொடர்பான பதிவுகள் மற்றும் வீடியோக்கள், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. வார்னே உயிருடன் இருந்த போது, அவரை பற்றிய டாக்குமெண்டரி ஒன்றை அமேசான் ப்ரைம் ரிலீஸ் செய்திருந்தது. இதில், சச்சின் உள்ளிட்ட பலர் வார்னே குறித்து பேசிய விஷயங்கள், அவரின் மறைவுக்கு பிறகு, அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.
சச்சின் பகிர்ந்த விஷயம்
அந்த வகையில், மும்பையிலுள்ள தன்னுடைய வீட்டிற்கு வார்னே வந்த போது நடந்த சுவாரஸ்ய தகவல் ஒன்று குறித்து, சச்சின் டெண்டுல்கர் அந்த டாக்குமெண்டரியில் மனம் திறந்திருப்பார். 'ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்திருந்த போது, மும்பையில் இருக்கும் என்னுடைய வீட்டிற்கு, விருந்துக்காக அழைத்தேன். அப்போது அங்கு வந்த ஷேன் வார்னே, என்னுடைய மேனேஜரை அழைத்துக் கொண்டே இருந்தார். அவர் என்னிடம் வந்து, வார்னே எதையும் சாப்பிடவில்லை என கூறினார். நான் பிசியாக மற்றவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்ததால், வார்னேவை கவனிக்கவில்லை.
வெளிக்காட்டவில்லை
அதன் பிறகு தான் ஒரு விஷயமே தெரிய வந்தது. வார்னே பொதுவாக காரமாக உள்ள உணவு வகைகளை சாப்பிட மாட்டார். அன்று எங்கள் வீட்டில் நாங்கள் சமைத்த உணவு காரமாக இருந்தது. அவர் உணவு அருந்தவில்லை என்பது எனக்கு தெரிந்து விட்டால், என் மனது காயம் அடைந்து விடும் என்பதற்காக, அவர் உணவருந்தாமல் இருந்ததை வெளிக்காட்டி கொள்ளவில்லை.
வார்னேவின் பண்பு
பின்பு அவரே எனது வீட்டின் சமையலறை சென்று, சாண்ட் விச்சினை உருவாக்கி உண்டார். இது தான் வார்னேவுடையே பண்பு" என தெரிவித்துள்ளார். வார்னேவின் மறைவுக்கு பிறகு, அவரின் குணம் குறித்து இது போன்ற பலர் பேசும் வீடியோக்கள் வெளியாகி, ரசிகர்கள் மனதை மேலும் உருகச் செய்து வருகிறது.