ஒரே நேரத்தில்.. ஒரே அணிக்கு எதிராக.. பேட்டிங் செய்த கணவன், மனைவி.. ப்பா, செம 'COINCIDENCE'ல.. வியந்து போன ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 476 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்திருந்தது.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி, 459 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது. கடைசி நாளான இன்று, இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.
மகளிர் உலக கோப்பை
200 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று பாகிஸ்தான் அணி ஆடி வரும் நிலையில், போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இன்னொரு பக்கம், ஆஸ்திரேலிய மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணியை உலக கோப்பை போட்டியில் இன்று எதிர்கொண்டது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணி வெற்றி கண்டது.
அலிஸா ஹீலி
இதனிடையே, மகளிர் மற்றும் ஆடவர் போட்டி என இரண்டையும் ஒப்பிட்டு ஒரு சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இடம்பெற்றுள்ளார். இவரின் மனைவி அலிஸா ஹீலி, பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக களமிறங்கி இருந்தார்.
ஒரே நேரத்தில் பேட்டிங்
இந்நிலையில், கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனை ஆகிய இருவரும் ஒரே நேரத்தில், வெவ்வேறு போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். அலிஸா ஹீலி 72 ரன்கள் எடுத்து, தங்கள் அணி வெற்றி பெற காரணமாக அமைந்தார். அதே நேரத்தில், அவரின் கணவர் ஸ்டார்க், பாகிஸ்தான் அணிக்கு எதிராக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவர் 13 ரன்களில் அவுட்டாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
வியப்பில் ரசிகர்கள்
வேகப்பந்து வீச்சாளரான கணவரும், பேட்ஸ்மேனான மனைவியும், ஒரே அணிக்கு எதிராக ஒரே நேரத்தில் பேட்டிங் செய்தது பற்றி, கிரிக்கெட் ரசிகர்கள் வியப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்குமா என்றும் ஆச்சரியத்தில் பதிவிட்டு வருகின்றனர்.