‘நகை, பைக் வேணும்’.. வரதட்சணை தரமறுத்த மாமியார்.. ஆத்திரத்தில் மருமகன் செய்த காரியம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வரதட்சனை கொடுக்காத ஆத்திரத்தில் மாமியார் வீட்டை மருமகன் தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யூடியூப்பில் ஆபாச பேச்சு வழக்கு.. ரவுடி பேபி சூர்யா கூட்டாளி சிக்கா மீது போலீசார் அதிரடி ஆக்ஷன்..!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி (வயது 79). கணவர் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் தனது இரண்டு பெண் பிள்ளைகளையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு சிறுபாக்கம் கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். இதில் மூத்த மகள் விநோதச்செல்வியை (வயது 45) அதே பகுதியை சேர்ந்த ஜெயவேல் (வயது 59) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஜெயவேல் தனது மாமியார் ஜோதிடம் 50 பவுன் நகையும், பைக் வாங்கித் தரவேண்டும் என கூறி மது போதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், ‘ஏற்கனவே உனக்கு 3 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளேன். இப்போது என்னிடம் பணம் நகை இல்லை. நானே வயதாகி தனிமையில் வசித்து வருகிறேன்’ என கூறி தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயவேல் ஜோதி வசித்து வந்த கூரை வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜோதி அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் கூரை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. இதனை அடுத்து ஜெயவேலின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். வரதட்சனை கேட்டு தராததால் மாமியார் வீட்டுக்கு மருமகனுக்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
