உங்க லாட்ஜ்ல குடிச்ச 'ஜூஸ்' தான் எல்லாத்துக்கும் காரணம்.. பக்கா பிளானோடு இருக்குறது தெரியாம ஆஸ்பத்திரிக்கு கிளம்பிய லாட்ஜ் ஓனர்
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளா: பெண் ஒருவர் விடுதி உரிமையாளருடன் புகைப்படம் எடுத்து கொண்டு பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மட்டாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் 26 வயதான ரின்சினா. இவர் கொச்சி துறைமுக பகுதியில் இருக்கும் விடுதியில் கடந்த மாதம் 25-ந் தேதி தனது ஆண் நண்பர் ஆட்டோ டிரைவரான ஷாஜகானுடன் (27) வந்து தங்கியுள்ளார்.
எங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது:
இந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி ஷாஜகான் திடீரென்று அந்த விடுதி உரிமையாளரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, தாங்கள் இருவரும் விடுதியில் உள்ள குளிர்பானத்தை வாங்கி குடித்ததாகவும், இதனால் தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
அதை தொடர்ந்து விடுதி உரிமையாளர் தனது நண்பருடன் ஷாஜகான் கூறிய ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் ஷாஜகான் விடுதி உரிமையாளரை திடீரென்று ரின்சினாவிடம் உல்லாசமாக இருக்க கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு விடுதி உரிமையாளர் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
செல்போனில் புகைப்படம்:
அதோடு விடுதி உரிமையாளர் மற்றும் அவருடன் வந்த நண்பரை மிரட்டி ரின்சினாவுடன் நிற்க வைத்து தவறான முறையில் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து உள்ளார் ஷாஜகான். பின்னர் அந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு பணம் கொடுக்கவில்லை என்றால் உறவினர்களுக்கு அனுப்பி வைப்பதுடன், சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார்.
இப்படியே விட்டால் சரி வராது:
என்னசெய்வதென்று அறியாமல் அதிர்ச்சியில் இருந்த 2 பேரும் தங்களிடம் இருந்த ரூ.16 ஆயிரத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். ஷாஜகான் அதன் பின்னரும் அவர்களை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இது இப்படியே விட்டால் சரி வராது என எண்ணிய விடுதி உரிமையாளர் மட்டாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷாஜகான், ரின்சினா ஆகியோரை கைது செய்தனர். அதோடு, இதுபோன்று இவர்கள் 2 பேரும் வேறு யாரிடமாவது மிரட்டி பணம் பறித்து உள்ளார்களா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
