தோனியின் கலக்கல் பைக் கலெக்க்ஷன்...ஷோ ரூம்களுக்கு சவால் விடும் பிரம்மாண்டம்... பைக் பிரியர்களின் தூக்கத்தை கெடுக்கும் புகைப்படங்கள்
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிரம்மாண்ட பைக் கலெக்ஷன் குறித்த புகைப்படங்களை அவரது மனைவி ஷாக்ஷி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

மகேந்திர சிங் தோனிக்கு விதவிதமான பைக்குகள் மற்றும் கார்கள் மீது அலாதியான காதல் உண்டு. உலகில் உள்ள புகழ்பெற்ற முன்னணி நிறுவனங்களின் கார்கள் மற்றும் பைக்குகளை அவர் சொந்தமாக வைத்துள்ளார். தோனியிடம் Ferrari 599 GTO, Hummer H2, the GMC Sierra உள்ளிட்ட பல உயர்ரக கார்கள் உள்ளன.
நவீன ரக பைக்குகள், கார்கள் மற்றும் மிக பெரிய வாகனங்களை இயக்கி பலமுறை சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் தோனி. இந்நிலையில் தனது கணவரின் பைக் கலெக்ஷன்கள் தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சாக்ஷி.
தற்போது இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது. இவற்றை பார்த்தால் எந்த ஒரு பைக் பிரியர்களுக்கும் பல இரவுகள் தூக்கம் வராது. அவ்வளவு பைக்குகள் ஷோரூம்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது போல அழகாக காட்சியளிக்கின்றன.
