சிதைந்து போன உடலுக்குள் உயிரோடு இருந்த பாம்பு.. பாத்ததும் ஓட்டம் பிடிச்ச நிபுணர்.. கதிகலங்க வைத்த சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Dec 07, 2022 10:37 AM

கடந்த 9 ஆண்டுகளாக பிரேத பரிசோதனை செய்து வரும் அமெரிக்க பெண் ஒருவருக்கு நடந்த நிகழ்வுகள் தொடர்பான செய்தி தற்போது பலரையும் கதிகலங்க வைத்துள்ளது.

autopsy technician found live snake inside body

Also Read | என்ன மனுஷன்யா.. பறிபோன வெற்றி வாய்ப்பு.. கிரவுண்ட்ல ஜப்பான் மேனேஜர் செஞ்ச காரியம்.. ஆனந்த் மஹிந்திரா நெகிழ்ச்சி ட்வீட்..!

அமெரிக்காவின் மேரிலாண்ட் என்னும் பகுதியை சேர்ந்தவர் ஜெசிக்கா லோகன். இவருக்கு தற்போது 31 வயதாகும் நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக பிரேத பரிசோதனை செய்யும் வேலையை அவர் விரும்பி செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

வித்தியாசமான வேலையாக இருப்பதால் இது தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் ஜெசிக்கா குறிப்பிட்டிருந்தார். அப்படி ஒரு சூழலில், தான் பிரேத பரிசோதனை செய்த போது தனக்கு நிகழ்ந்த ஒரு கொடூரமான அனுபவம் தொடர்பாக தற்போது ஜெசிக்கா பகிர்ந்துள்ள செய்தி, பலரையும் பீதியில் உறைய வைத்துள்ளது.

இது தொடர்பாக வெளியான தகவலின் படி, இறந்த நபரின் உடலை ஜெசிக்கா பரிசோதித்து கொண்டிருந்த சமயத்தில், அவரது உடலில் உயிரோடு இருக்கும் பாம்பு ஒன்றை கண்டு இருக்கிறார் ஜெசிக்கா. இதனைக் கண்டதும் பதறி அடித்துக் கொண்டு அறையில் இருந்து ஓட்டம் பிடித்த ஜெசிக்கா அதனை பிடித்த பிறகு தான் வெளியே வருவேன் என்றும் கூறி இருக்கிறார்.

autopsy technician found live snake inside body

இறந்த நபரின் உடலுக்குள் ஒரு பாம்பு எப்படி உயிருடன் இருந்திருக்கலாம் என்பது பலருக்கு பயத்தையும் அதே வேளையில் குழப்பத்தையும் உண்டு பண்ணி இருக்கலாம்.

ஆனால் இதற்கான காரணம் தொடர்பாக வெளியான தகவலின் படி, இறந்த அந்த நபரின் உடல் ஒரு ஓடையில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இறந்த பிறகு அந்த உடலுக்குள் பாம்பு புகுந்து இருக்கலாம் என்றும் உடல்கள் சூடாகவும் ஈரமாகவும் இருந்ததால் பூச்சிகள் ஊர்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல வறண்ட சடலத்தில் அப்படி எதுவும் இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.

autopsy technician found live snake inside body

அப்படி ஓடையில் இறந்து கிடந்த நபரின் உடலை ஜெசிக்கா பரிசோதனை செய்து கொண்டிருக்கும் போது அவரின் அழகிய உடலின் தொடையிலிருந்து உயிரோடு பாம்பு இருந்திருக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும் என்பதால், குளிர்காலத்தில் சிதைந்த உடலை பரிசோதனை செய்வேன் என ஜெசிக்கா விளக்கம் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இறந்த நபரின் உடலில் இருந்து பாம்பு உயிருடன் பாம்பு வெளிப்பட்ட விஷயம் தற்போது ஜெசிக்காவை மட்டும் இல்லாமல் இதனை கேள்விப்படும் பலரையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

Also Read | 9 வருடம் முன் இறந்த மனைவி.. தற்கொலைன்னு நெனச்சிட்டு இருந்தப்போ.. தெரியவந்த அதிர்ச்சி.!

Tags : #AUTOPSY TECHNICIAN #LIVE SNAKE #INSIDE BODY

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Autopsy technician found live snake inside body | World News.