ஒரே 'வீட்டிலிருந்து'... கைப்பற்றப்பட்ட 'நான்கு' பேர் 'உடல்கள்' - "வீட்டுக்கு பின்னாடி குழி தோண்டி, அது பக்கத்துலயே,,.." அச்சத்தில் 'நடுங்கி கிடக்கும் 'கிராம' மக்கள்!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலங்கானா மாநிலம் வனபர்த்தி என்னும் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றின் வீட்டில் இருந்து நான்கு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், உடனடியாக விரைந்து வந்த போலீசார் அங்கு சோதனையை மேற்கொண்டனர். 60 வயதான அஜ்மீரா என்ற பெண், அவரது மகள் அஸ்மா பேகம், அஜ்மீராவின் மருமகன் கவாஜா, பேகம் மற்றும் கவாஜாவின் மகள் ஹசீனா ஆகியோரின் உடலை போலீசார் கைப்பற்றினர். இதில், சிறுமி உட்பட மூன்று பெண்கள் உடலும் வீட்டிற்குள் கிடந்த நிலையில், கவாஜாவின் உடல் மட்டும் வீட்டிற்கு பின்புறம் வெளியே கிடந்துள்ளது. அவரின் உடலிற்கு அருகே குழி ஒன்று தோண்டப்பட்டிருந்த நிலையில் அதனருகே ஒரு பாக்கெட்டில் எலுமிச்சைப்பழங்கள் மற்றும் தேங்காய் ஆகியவையும் கைப்பற்றப்பட்டது.
அங்கிருந்து கைப்பற்ற நான்கு பேரின் உடலில், எந்த வித காயங்களும் இல்லாத நிலையில் அவர்கள் விஷம் குடித்திருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாந்த்ரீக செயலில் ஈடுபட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்களா அல்லது யாராவது நான்கு பேரையும் கொலை செய்து விட்டு சென்றனரா எனவும் பல கோணங்களில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களின் உறவினர்கள் சிலர், புதையல் ஒன்றை எடுப்பதாக கூறி அதனை தேடும் பணியில் குடும்பத்தினர் இறங்கியிருக்கலாம் எனவும் கருதுகின்றனர். எதுவாக இருந்தாலும் உடல்களின் பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவர்களின் மரணம் குறித்த காரணம் தெரிய வரலாம் என கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்
