''இது'க்காக தான் அவசர அவசரமா சடலத்தை எரிச்சோம்'!.. ஹத்ராஸ் கோர சம்பவம்... உ.பி. அரசு உச்ச நீதிமன்றத்தில் 'பகீர்' தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Oct 06, 2020 06:52 PM

ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு தலித் பெண் பலியான விவகாரம் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வர உள்ள நிலையில், உத்தரபிரதேச அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

up hathras rape case govt tells why victims body was burnt police

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 19 வயது தலித் பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட கோரிய பொது நல மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வர உள்ள நிலையில், உத்தரபிரதேச அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

வன்முறை சம்பவங்களை தடுக்கவே பெண்ணின் உடல் அதிகாலையில் எரிக்கப்பட்டது என உச்சநீதிமன்றத்தில், உத்தரப்பிர​தேச அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது. சாதி மற்றும் மத சக்திகள் இந்த விவகாரத்தை கையில் எடுக்கும் என உளவுத்துறை எச்சரித்த தகவலும் அதில் இடம் பெற்றுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் அதில் இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரத்தில், நியாயமான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உத்தரப்பிரதேச அரசுக்கு எதிராக அவப்பெயரை சில அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் உருவாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு சில அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் சாதி சாயம் பூசி வருகின்றன என்றும், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரப்பிரதேச அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Up hathras rape case govt tells why victims body was burnt police | India News.