'5 போலீசாருக்கு காந்தியடிகள் காவல் விருது...' 'கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக...' - தமிழக அரசு அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 2 பெண் ஆய்வாளர் உட்பட 5 போலீஸாருக்கு காந்தியடிகள் காவல் விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி கள்ளச்சாராய ஒழிப்பில் நேர்மையுடன் மற்றும் சிறப்பாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் காந்தியடிகள் காவல் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டுக்கான விருது பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 2 பெண் காவல்துறை அதிகாரிகள் மற்றும் 3 ஆண் காவல்துறை அதிகாரிகள் என 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
1. மகுடீஸ்வரி, பெண் காவல் ஆய்வாளர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, புனித தோமையார் மலை, தெற்கு மண்டலம். சென்னை பெருநகர காவல் ஆய்வாளர்.
2. லதா, பெண் காவல் ஆய்வாளர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, முசிறி-துறையூர், திருச்சி மாவட்டம்.
3. செல்வராஜூ, காவல் உதவி ஆய்வாளர், மத்திய புலனாய்வுப் பிரிவு, சேலம் மண்டலம்.
4. சண்முகநாதன், ( தலைமைக் காவலர்), ஸ்ரீவில்லிபுத்தூர் தாலூகா காவல் நிலையம், அயல்பணி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், விருதுநகர் மாவட்டம்.
5. ராஜசேகரன், தலைமைக் காவலர் , கீழ்கொடுங்காலூர் காவல் நிலையம், அயல்பணி மத்திய புலனாய்வுப் பிரிவு, திருவண்ணாமலை மாவட்டம்.
காந்தியடிகள் காவலர் விருது வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் நாள், குடியரசு தினத்தன்று வழங்கப்படும் எனவும் பரிசுத்தொகையாக ரூ.40,000/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
