'சார், உள்ள காய்கறி தான் இருக்கு...' 'ஓஹோ காய்கறி தானா...! சரி நாங்களே பாக்குறோம்' 'உள்ள இருந்த 10 மர்ம மூட்டையில்...' - அதிர்ச்சியில் உறைந்த போலீசார்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Oct 06, 2020 05:35 PM

நெல்லிக்குப்பம் அருகே நேற்றைக்கு முன்தினம் (04-10-2020) போலீசார் காராமணிக்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

cuddalore police seized 10 lakhs tobacco products drugs

அப்போது கடலூரில் இருந்து அதிவேகமாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற்றுள்ளனர். ஆனால், அந்த வண்டி நிற்காமல் போகவே போலீசார் சந்தேகமடைந்தனர்.

வாகனத்தைத் துரத்திச் சென்று கீழ்ப்பட்டாம்பாக்கத்தில் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது வண்டியை ஓட்டிக்கொண்டு வந்த டிரைவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியதையடுத்து சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தைச் சோதனை செய்தனர்.

அதில் காய்கறி, பழங்கள் இருந்த மூட்டைகளுடன் தடை செய்யப்பட்ட பலவிதமான போதைப் பொருட்கள் 10 சாக்கு மூட்டைகள் மற்றும் 30 டிரேடுகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்து நெல்லிக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.

நெல்லிக்குப்பம் போலீசாரிடம் விசாரணை நடத்தியதில் வண்டியை ஓட்டி வந்தது நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சரவணகுமார் (43) என்பதும் அவருடன் கூட வந்த நபர் நெல்லிக்குப்பம் மெயின் ரோடு ஹாஜாமொகிதீன் மகன் முகமது ஷெரீப் (28) என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சரவணகுமார், முகமது ஷரீப் இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் கடத்தி வந்த 10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் போதைப் பாக்குகளை பறிமுதல் செய்துள்ளனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை யாரிடம் இருந்து வாங்கிக் கொண்டு வரப்படுகிறது  என்றும், வாங்கிக்கொண்டு இதை எங்கு கொண்டு செல்கிறார்கள்? என்பது குறித்தும் போலீசார் மிக தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags : #POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Cuddalore police seized 10 lakhs tobacco products drugs | Tamil Nadu News.