வாகனங்களுக்கான 'நம்பர் பிளேட்' விதிமுறைகள் மாற்றம்!.. புதிய விதிமுறைகள் என்ன?.. போக்குவரத்து காவல்துறை அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்போக்குவரத்து வாகனச் சட்ட விதிமுறைப்படி நம்பர் பிளேட் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை நகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
![tamil nadu vehicles number plate rules traffic police announcement tamil nadu vehicles number plate rules traffic police announcement](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/tamil-nadu-vehicles-number-plate-rules-traffic-police-announcement.jpg)
சென்னை நகரில் பெரும்பாலான வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளில் எழுதப்பட்டுள்ள எண்கள், விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால், நம்பர் பிளேட்டுகளும், அதன் எழுத்து வடிவங்களும் எவ்வாறு இருக்க வேண்டும் என காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், '70 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களின் முன்னால் உள்ள நம்பர் பிளேட்டில், எழுத்தின் உயரம் 15 மில்லி மீட்டராகவும், தடிமன் 2.5 மில்லி மீட்டராகவும், இடைவெளி 2.5 மில்லி மீட்டராகவும் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்களின் பின்னால் உள்ள நம்பர் பிளேட்டில், எழுத்துகள் 35 மில்லி மீட்டர் அளவிலும், 7 மில்லி மீட்டர் தடிமனிலும், 5 மில்லி மீட்டர் இடைவெளியுடன் இருக்க வேண்டும் எனத் கூறப்பட்டுள்ளது. மூன்று சக்கர வாகனங்களில் எழுத்து மற்றும் எண் அளவு 40 மில்லி மீட்டர் உயரமும், 7 மில்லி மீட்டர் தடிமனும், 5 மில்லி மீட்டர் இடைவெளியும் இருக்க வேண்டும் என்றும், 500 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட 3 சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டானது, எண்ணும், எழுத்தும் 35 மில்லி மீட்டர் உயரமும், 7 மில்லி மீட்டர் தடிமனும், 5 மில்லி மீட்டர் இடைவெளியுடனும் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இவை தவிர, மற்ற அனைத்து மோட்டார் வாகனங்களிலும் எழுத்துகள் 65 மில்லிமீட்டர் உயரத்திலும், 10 மில்லி மீட்டர் தடிமனிலும், 10 மில்லி மீட்டர் இடைவெளியுடனும் இடம்பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. அனைத்து தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டும் வெள்ளை நிறத்திலும், எழுத்துகள் கருப்பு நிறத்திலும் எழுதப்பட்டிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே போன்று, அனைத்து வர்த்தக வாகனங்களிலும் மஞ்சள்நிற போர்டில் கருப்பு நிறத்தில் எண்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)