VIDEO: சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தில்... காரில் கடத்தப்பட்ட இளைஞர் மரணம்!.. காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்குப் பதிவு!.. சிபிசிஐடி அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கில் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி கொலை வழக்குப்பதிவு செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பை சேர்ந்தவர் செல்வன் (வயது 32). இவர் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார். நிலத்தகராறு காரணமாக கடந்த 17-ந் தேதி இவர் காரில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க. வர்த்தக அணியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் திருமணவேல் ஆகியோர் உள்பட சிலர் மீது நெல்லை மாவட்டம் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருமணவேல் உள்பட 2 பேர் சென்னை கோர்ட்டில் நேற்று முன்தினம் சரண் அடைந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி போலீஸ் டிஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திசையன்விளை போலீஸ் நிலையத்தில் உள்ள கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், மேற்கூறிய வழக்கில் சிபிசிஐடி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. அதில், திருமணவேல், ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்பட 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொறுப்பு துறப்பு (Disclaimer):
இந்த சிசிடிவி காட்சிகள், நடந்த சம்பவத்தைப் பற்றிய ஒரு தெளிவான புரிதலுக்காக மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு அசௌகரியமான மனநிலையை உருவாக்குவதற்கு அல்ல.
வீடியோ இணைப்பு கீழே:

மற்ற செய்திகள்
