“உங்க வீட்ல சூனியம், செய்வினைலாம் வெச்சுருக்காங்க!”.. மக்களின் பயத்தை முதலீடாக்கிய கும்பல்!.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மாந்திரீகம் செய்வதாக கூறி பணம் பறித்த கும்பலை ஊர்மக்கள் அதிரடியாக பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆட்டோவில் வீடு வீடாகச் சென்று மாந்திரீகம் செய்வதாக கூறி 6 பேர் கொண்ட கும்பல் பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது சந்தேகப்பட்ட பொது மக்கள், இவர்களை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விரககுளம் கிராமப் பகுதியில் வீடு வீடாக சென்ற இந்த கும்பல்ல் அங்குள்ள வீடுகளில் சூனியம், செய்வினை முதலானவை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி மக்களை அச்சத்துக்குள் ஆழ்த்தியுள்ளனர். பின்னர் இதற்கு பரிகாரமும் தாங்களே செய்வதாகக் கூறி, மோதிரம், தாயத்து உள்ளிட்டவற்றை கொடுத்து 500 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை பொதுமக்களிடம் அந்த கும்பல் பணம் வசூல் செய்துள்ளது.
இதனால் சந்தேகம் கொண்ட இளைஞர்கள் சிலர், சம்மந்தப்பட்ட 6 பேரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், இவர்கள் 6 பேரும் போலி மாந்த்ரீகர்கள் என்பதும், மதுரையை சேர்ந்த இவர்கள் இதைத் தொடர்ந்து செய்துவந்ததும், தற்போது மக்களிடம் சிக்கியதும் தெரியவந்தது.