'துப்பாக்கி முனை'யில்... 'NET' CAFE உரிமையாளரிடம் ஆட்டைய போட்ட 'இன்ஜினியரிங்' மாணவர்கள்... விசாரணையில் தெரிய வந்த திடுக்கிடும் 'தகவல்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் என்னும் பகுதியில் நெட் சென்டர் ஒன்றில் இரண்டு இளைஞர்கள் சேர்ந்து சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த நெட் சென்டரின் உரிமையாளர் போலீசாரிடம் புகாரளித்தார். இதில், சச்சின் என்ற இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், மற்றொரு இளைஞரான பங்கஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தெரிவிக்கையில், 'சச்சின் மற்றும் பங்கஜ் ஆகிய இளைஞர்கள் இன்ஜினியரிங் படித்து வந்த நிலையில், தொடர்ந்து தோல்வி பெற்று வந்த காரணத்தினால் தங்களது கல்லூரி படிப்புகளை தொடரவில்லை.
இதனைத் தொடர்ந்து, அந்த இளைஞர்கள் இரண்டு பேரும் மிக வேகமாக அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு அந்த நெட் சென்டரில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்' என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சச்சின் என்பவரிடம் இருந்து திருடிய பணமும், நாட்டுத் துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது. மற்றொரு இளைஞரைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
