“உன் மூஞ்சிலயே ஓங்கி குத்தணும் போல இருக்கு!”.. ‘டென்சன் ஆன அதிபர்!’.. ரிப்போர்ட்டர் செய்த தரமான சம்பவம்...! - அதிர்ச்சியடைந்த மக்கள் கூட்டம்!!!
முகப்பு > செய்திகள் > உலகம்செய்தியாளர்கள் சந்திப்பின் போது ரிப்போட்டாரின் கேள்விக்கு, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ விநோதமான பதிலளித்துள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
![Brazil President Bolsonaro\'s shocking punching reply to reporter Brazil President Bolsonaro\'s shocking punching reply to reporter](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/brazil-president-bolsonaros-shocking-punching-reply-to-reporter.jpg)
கடந்த ஞாயிற்று கிழமை செய்தியாளர்களை சந்தித்த பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவிட ரிப்போர்ட்டர் ஒருவர், அவரது மனைவியின் வங்கி கணக்கில் முறைகேடாக டெபாசிட் செய்யப்பட்ட பணம் குறித்து கேள்வி கேட்டுள்ளார்.
செய்தியாளரின் இந்த கேள்வியால் கடுப்பான அதிபர், “உங்க முகத்தில் ஓங்கி குத்தணும்னுதான் நான் விருப்பப்படுறேன்” என்று பதிலளித்தது அங்கு சலசலப்பை உண்டாக்கியது.
கடந்த 2011 மற்றும் 2018 ஆண்டுகளில் அதிபர் போல்சானோராவின் மகனின் உதவியாளர், அதிபரின் மனைவி வங்கி கணக்கில் முறைகேடாக பணம் டெபாசிட் செய்ததாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட தகவல் பற்றிதான் அந்த நிரூபர் கேட்டுள்ளார். நாட்டில், ஊழலுக்கு எதிராக போராடுவதாக அறிவித்த அதிபர் குடும்பம் இப்படி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தொடர் விமர்சனங்கள் எழுந்து வரும் இந்த சூழலில் நிருபர் கேட்ட கேள்வி பிரேசில் அதிபரை எரிச்சலின் உச்சத்துக்குக் கொண்டு போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)