’லெட்டர் எழுதி வச்சிட்டு தற்கொலை...’ - “என் பொண்ணு அப்படிலாம் இல்ல... இதுல, ஏதோ ’மர்மம்’ இருக்கு...!” - கதறித் துடிக்கும் தந்தை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரபிரதேச மாநிலத்தில் 27 வயதான இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தில், கொலை தான் என பெண்ணின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் மணியார் நகர் பஞ்சாயத்தில் நிர்வாக அதிகாரியாக (பி.சி.எஸ் அதிகாரி) பணிபுரியும் 27 வயதான மணி மஞ்சரி ராய் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை சம்பவத்தை அறிந்த போலீசார் மணி மஞ்சரி ராய் வீட்டின் கதவை உடைத்து வீட்டு தளத்தின் மேற்க்கூரையில் தொங்கிய நிலையில் காணப்பட்ட அவரது உடலை மீட்டனர். மேலும் அவரது இல்லத்தில் தற்கொலைக்கான கடிதமும் எழுதி வைத்துள்ளார்.
போலிசாரால் மீட்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில், 'பல்லியாவுக்கு வருவதற்காக நான் டெல்லி மற்றும் மும்பையிலிருந்து தப்பித்தேன். ஆனால் தவறான செயல்களைச் செய்வதில் நான் ஏமாற்றப்பட்டேன். நான் நீண்ட காலம் ஏமாற்றப்பட்டேன்.' எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, பெண் அதிகாரியின் தற்கொலைக் கடிதம் மூலம் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறது எனக்கூறியுள்ளனர்.
ஆனால் மணி மஞ்சரி ராய்யின் தந்தை ஜெய் தாக்கூர் ராய் தனது மகளின் மரணத்தில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இவர் தற்போது காசிப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமதாபாத் தெஹ்ஸில் உள்ள கனுவான் கிராமத்தில் வசித்து வருகிறார். மேலும் தனது மகள் கொலை செய்யப்பட்டதாகவும், இந்த விவகாரம் தற்கொலை என மறைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தனது மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை கிடையாது என ராய் கூறினார்.
இதையடுத்து மணி மஞ்சரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய போலீசார், வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பு : தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.