நாளுக்குநாள் 'நல்ல' முன்னேற்றம்... 'சூப்பர்' செய்தி சொன்ன சுகாதாரத்துறை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 2-வது நாடாக இருந்தாலும் கொரோனாவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை நம்முடைய நாட்டை பொறுத்தவரை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் சராசரியை விட குணமடைந்தோரின் சராசரி விகிதம் இந்தியாவில் அதிகமாக உள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''கடந்த 24 மணிநேரத்தில் 16 ஆயிரத்து 883 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரத்து 830 ஆக உயர்ந்து உள்ளது. இதனை தொடர்ந்து இதன் விகிதம் 61.53% ஆக உயர்வடைந்துள்ளது,'' என தெரிவித்துள்ளது.
நேற்று இந்த சராசரி 61.13% ஆக இருந்தது. இந்த நிலையில் தற்போது 61.53% ஆக இந்த விகிதம் அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. சண்டிகர் (85.9), லடாக் (82.2), உத்தரகாண்ட் (80.9), சத்தீஷ்கார் (80.6), ராஜஸ்தான் (80.1) ஆகிய பகுதிகளில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் சராசரி 80% அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.