“ஒரு வார்டுல இருந்து இன்னொரு வார்டுக்கு போக பணம் கேக்குறாங்க”.. நோயாளியின் ஸ்ட்ரெச்சரை தள்ளும் 6 வயது சிறுவன்!.. விமர்சனத்துக்கு உள்ளாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனை ஒன்றில்தான் 6 வயதுச் சிறுவன் ஒருவன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, தனது தாத்தாவை ஒரு வார்டில் இருந்து இன்னொரு வார்டுக்கு, தனது தாயுடன் இணைந்து ஸ்ட்ரெச்சரை தள்ளிச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை

देवरिया, जहां से उ.प्र. राज्य सरकार में दो मंत्री आते है, वहां के जिला अस्पताल की ये हालत है कि पर्याप्त कर्मचारी नहीं है लोगों को स्ट्रेचर पर ले जाने के लिए। वार्ड भी अलग अलग नहीं बने हैं,जैसे कि ये महामारी इस अस्पताल के लिए मात्र एक साधारण फ्लू हो। ऐसे लड़ेंगे हम कोरोना से? pic.twitter.com/9CtymqFbWN
— Keshav Chand Yadav (@keshavyadaviyc) July 20, 2020
அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. உ.பியின் பர்காஜ் மாவட்டத்தில் உள்ள கவுரா கிராமத்தைச் சேர்ந்தவர் சேதி யாதவ். உடநிலை சரியில்லாத இவரை, அண்மையில் இவரது மகள் இவரை மருத்துவமனையில் சேர்த்து, கவனித்துவருகிறார். இவரது மகனும் இவரும்தான் சேர்ந்து இழுத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக வெளியான வீடியோவில் ஸ்ட்ரெச்சரை சிறுவனின் தாய் முன்பக்கம் இருந்து இழுத்துக்கொண்டு போக, சிறுவன் பின்னால் இருந்து ஸ்ட்ரெச்சரை தள்ளிச் செல்கிறார். இதுபற்றி அவர்கள் கூறும்போது, ஒவ்வொரு முறையும் ஸ்ட்ரெட்ச்சரை வேறு வார்டுக்கு மாற்றும்போது மருத்துவமனை வார்டு ஊழியர் 30 ரூபாய் கேட்பதால், தானும் தன் மகனும் சேர்ந்து ஸ்ட்ரெச்சரை இழுத்துச் செல்ல வேண்டியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சிறுவனின் வீடியோவைப் பார்த்த அந்த மாவட்ட மேஜிஸ்திரேட் அமித் கிஷோர், நேரடியாக மருத்துவமனைக்குச் விசாரணை நடத்தியதுடன், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களையும் நேரில் பார்த்து விபரம் கேட்டறிந்துள்ளார். பின்னர் குற்றம் சாட்டப்பட்ட வார்டு ஊழியரை பணிநீக்கம் செய்ததுடன், இது தொடர்பான முழு அறிக்கையை சமர்ப்பிக்கவும் மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
