‘ஏது பாம்பா?’.. ஒப்புகைச் சீட்டு எந்திரத்துக்குள் இருந்த பாம்பு.. அலறி ஓடிய வாக்காளர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Apr 23, 2019 01:02 PM

வாக்குச் சாவடியில் கொடுக்கப்பட்டும் ஒப்புகைச் சீட்டு எந்திரத்துக்குள் பாம்பு இருந்ததால் வாக்காளிக்க வந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

snake comes out from election voting machine - bizarre in kerala

மக்களவைத் தொகுதி தேர்தல் தொடங்கிய நிலையில், கேரளாவின் 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் சார்பில் பி.கே. ஸ்ரீமதி, காங்கிரஸ் கூட்டணி சார்பில் கே. சுரேந்திரன், பாஜக சார்பில் கே. பத்மநாபன் ஆகியோர் போட்டியிடும் கேரளாவின் கண்ணூர் நாடாளுமன்றத் தொகுதியில் விறுவிறுவென வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது.

காலை 7 மணி முதலே  இந்தத் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது. இதே தொகுதியில்தான் முதல்வர் பினராயி விஜயன் கண்ணூர் மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தார். இந்த தொகுதிக்குட்பட்டதுதான் மயில் கண்டகை நகர். இங்குள்ள வாக்குப்பதிவு மையத்தின் ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் ஏதோ சத்தமும், எந்திரம் ஆடுவது போன்ற தொனியும் ஏற்பட வாக்களித்துக்கொண்டிருந்த வாக்காளர்கள் அதிர்ந்தனர்.

அப்போது திடீரென பாம்பின் சத்தம் என கண்டுபிடித்ததும் மக்களும் சில அதிகாரிகளும் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். பின்னர் அதிகாரிகளும் போலீஸாரும் வந்து பாம்பைப் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டுவிட்டு மீண்டும் வாக்குப்பதிவினை தொடர்ந்தனர். எனினும் பலர் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு நேரம் எடுத்துக்கொண்டனர்.