'கிணற்றில்' விழுந்த பெண் 'யானையை...' 'பாவப்பட்டு தூக்கிவிட்டா...' 'அது பாத்த வேலை இருக்கே...' 'என்னம்மா நீ இப்படி பண்ற...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் - கர்நாடக எல்லையான ஹானூர் வனப்பகுதி அருகே கிணற்றில் தவறி விழுந்த 10 வயது பெண் யானையை 2 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

தமிழகம் கர்நாடக எல்லையான ஹானூர் வனத்தை ஒட்டி சென்னேகவுடா தொட்டி கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் காட்டுயானைகள் அடிக்கடி புகுந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வருவதாக புகார் கூறப்பட்டது.
இந்நிலையில், வனத்தில் இருந்து வெளியேறி, விவசாய நிலைத்தில் புகுந்த 10 வயதுள்ள பெண்யானை ஒன்று அங்குள்ள தரைமட்ட கிணற்றில் தவழி விழுந்தது. கிணற்றிலிருந்து வெளியேற முடியாமல் வெகுநேரமாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட அவ்வழியாக சென்ற கிராமத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கிணற்றில் தத்தளித்த யானையை கயிறு கட்டி ஜேசிபி மூலம் இழுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் உதவியுடன் கிணற்றின் பக்கவாட்டு தரைப்பகுதியை இடித்து சரிவு ஏற்படுத்தினர். அவ்வழியாக யானை மெதுவாக மேலே ஏறி வந்தது.
இதையடுத்து வெகுநேரமாக கோபத்துடன் கத்திக் கொண்டிருந்த யானை மேலே வந்ததும் கோபம் அடங்காமல் எதிரே இருந்த ஜேசிபியை முட்டி தள்ளிவிட்டு வனத்தை நோக்கி ஓடியது. யானை மீட்பு பணியை பார்க்க வந்த மக்கள், தாங்கள் இருக்கும் இடத்தை நோக்கி யானை வந்ததைப் பார்த்து தலைதெறிக்க ஓடினர்.
