“காங்கிரஸ் உயர் பதவியில் இருப்பவர்கள் ஒடுக்குகிறார்கள்!” - இன்று டெல்லியில் அதிரடியாக பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாநடிகை குஷ்பு பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில்,டெல்லியில் பாஜகவில் இணைந்துள்ளார்.

தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்து அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து, குஷ்புவும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாகக் கூறி தனது ராஜினாமா அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் உண்மையாக உழைக்க நினைக்கும், தன்னை காங்கிரஸ் உயர் பதவிக்காரர்கள் ஒடுக்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
Smt. Khushbu Sundar joins BJP in presence of senior BJP leaders at BJP headquarters in New Delhi. #JoinBJP pic.twitter.com/jSMCHHPP9y
— BJP (@BJP4India) October 12, 2020
சமீபத்தில் மாற்றம் தவிர்க்க முடியாதது என்று ட்வீட் பதிவிட்டிருந்த நடிகை குஷ்பு இன்று பாஜகவில் இணைய உள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது டெல்லியில் பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

மற்ற செய்திகள்
