'எனக்கு 'கொரோனா' இல்ல'... 'ஆனாலும் லைட்டா பயமா இருக்கு'... இப்படி பயப்படுகிறவர்களுக்காக 12 நிமிடத்தில் பரிசோதனை முடிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்தனக்கு கொரோனா இல்லை என்றாலும், தினமும் வெளியில் செல்பவர்கள், பலதரப்பட்ட மக்களைச் சந்திப்பவர்கள் அல்லது மக்கள் கூடும் இடங்களில் பணிகளை மேற்கொள்பவர்களுக்கு எப்போதும் மனதில் ஒருவித பயம் இருக்கத்தான் செய்யும். தனக்கு கொரோனா இல்லை என்றாலும், ஏதாவது சளி பிரச்சனை அல்லது காய்ச்சல் இருந்தால் பயம் வந்து தொற்றிக் கொள்கிறது. அப்படி பயப்படுகிறவர்களுக்காகவே விரைவில் பரிசோதனை முடிவைத் தெரிந்து கொள்ளும் முறை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
![The 12-minute Covid test you can take at BOOTS The 12-minute Covid test you can take at BOOTS](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/the-12-minute-covid-test-you-can-take-at-boots.jpg)
பிரிட்டனின் 'Boots' என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்த முறையை அறிமுகம் செய்துள்ளது. 12 நிமிடங்களில் கொரோனா பரிசோதனையைச் செய்து அதன் முடிவைத் தெரிந்து கொள்ளலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் 97 சதவீதம் துல்லியமாக இருக்கும் எனச் சோதனை முயற்சியில் தெரியவந்துள்ளது.
இன்னும் 15 நாட்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த பரிசோதனை மக்களின் மனதில் இருக்கும் தேவையற்ற பயத்தைப் போக்கி அவர்களின் சாதாரண வாழ்க்கையை வாழ வழிவகுக்கும் என Boots நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி செபாஸ்டின் ஜேம்ஸ் கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில் பரிசோதனைக்கு 120 பவுண்டுகள் எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தேவை அதிகமானால் கட்டணம் குறைக்கப்படும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த சோதனை அறிகுறி இல்லாமல், தனக்கு கொரோனா இருக்குமோ என அச்சம் கொள்பவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)