சொந்த வீட்டில் நகை திருடிய வழக்கில் .. தேடப்பட்டு வந்த சீரியல் நடிகை! .. பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர்.. ‘நீதிபதி’ விதித்த உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடலூர் மாவட்டம் பண்ருட்டி, மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்த விவசாயி தேசிங்கு எனபவரது மகன் மணிகண்டன்(வயது 24) .

கார் டிரைவரான இவரது மனைவியும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவருமான புவனேஸ்வரி இருவரும் சேர்ந்து கடந்த மாதம் 12-ந்தேதி தேசிங்குவின் வீட்டில் 18 பவுன் நகை, 300 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை திருடியுள்ளதாக தெரிகிறது. நடிகையான தனது மனைவி புவனேஸ்வரி புதிதாக தயாரிக்கவிருக்கும் தொலைக்காட்சி தொடருக்காக அவற்றை தனது சொந்த வீட்டிலேயே திருடியதாகவும் விசாரணையில் மணிகண்டன் அளித்த வாக்குமூலத்தை அடுத்து புவனேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்த பண்ருட்டி போலீசார் புவனேஸ்வரியை தேடி வந்தனர்.
இதை அறிந்த புவனேஸ்வரி முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய அம்மனுவை விசாரித்த நீதிபதி, பண்ருட்டி கோர்ட்டில் புவனேஸ்வரி முன்ஜாமின் பெற்று கொள்ளுமாறு கூற, பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகிய புவனேஸ்வரி அங்கு முன் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கற்பகவள்ளி, தினந்தோறும் காலை 10.30 மணிக்கு புவனேஸ்வரி, பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்து போட்டு செல்லவேண்டும் என்கிற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார். அதன்படி நேற்றே புவனேஸ்வரி பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு சென்றார்.

மற்ற செய்திகள்
