'புயலுக்கு' பலியானோர் எண்ணிக்கை '72 ஆக உயர்வு...' 'தண்ணீரில்' மிதக்கும் 'விமான நிலையம்...' 'ஒரு லட்சம் கோடி சேதம்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | May 21, 2020 06:47 PM

ஆம்பன் புயலுக்கு மேற்குவங்கத்தில் 72 பேர் பலியாகி உள்ளதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

The number of victims of the Ambhan storm rises to 72

ஆம்பன் புயல் நேற்று இரவு மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 150-165 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது.

மழை காரணமாக மேற்குவங்கத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக மின்சார கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்தன. இதனால், பல நகரங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. பல தெருக்களில் வெள்ள நீர் தேங்கியும் மரங்கள் சாய்ந்தும் கிடக்கின்றன. கொல்கத்தா விமான நிலையத்தில் மழை நீர் சூழ்ந்ததால் விமான நிலையம் மூடப்பட்டது.

இந்த புயல் சேதம் தொடர்பாக பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, புயல் காரணமாக 72 பேர் பலியாகியுள்ளதாகவும், ஒரு லட்சம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு போதிய நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.