'கோரத்தாண்டவம்' ஆடிய 'ஆம்பன் புயல்...' '12 பேர்' பலியானதாக தகவல்... 'பேரழிவைக்' கணக்கிட '4 நாட்கள்' ஆகும்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | May 21, 2020 08:46 AM

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆம்பன் புயல் மேற்குவங்கம் வங்காளதேசம் கடலோர எல்லையில் முழுமையாக அதிதீவிர புயலாக கரையை கடந்தது.

The Storm of Ambhan crossed the shore 12 killed in West Bengal

மேற்குவங்கத்தில் 25 கிலோ மீட்டர் வேகத்தில் வடகிழக்கில் நகர்ந்து கொண்டடிருந்த மிக கடும் புயலான ஆம்பன் புயல் கரையை கடக்கும்போது காற்றின் 155-165 கிலோமீட்டர் வரை வீசிக்கொண்டிருந்தது.

இந்த புயல் நேற்று பிற்பகல் மேற்கு வங்கத்தின் டிகாவுக்கும் வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கும் இடையே கரையை கடந்தது. இது சுமார் 4 மணிநேரம் கரையை கடந்தது.

இது தற்போது கொல்கத்தாவிலிருந்து தெற்கே 70 கிலோமீட்டர் தொலைவிலும், திகா பகுதியிலிருந்து வடகிழக்கே 95 கிலோ மீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளிலிருந்து வடகிழக்கே 35 கிலோமீட்டர் தொலைவிலும், வங்காளதேசத்தின் கேப்புபாரா பகுதியிலிருந்து தென்மேற்கே 185 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்து 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவிழந்து , தொடர்ந்து நாளை காலை புயலாக வலுவிழக்கும் எனக் கூறப்படுகிறது.

மேற்குவங்கத்தில் 24 பர்கனாஸ், ஹவுரா, கோல்கட்டா, மேற்கு மிட்னாபூர், கிழக்கு மிட்னாபூர், புருலி பங்குரா உள்ளிட்ட பகுதிகள் புயலால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளன. ஆம்பன் புயலின் கோர தாண்டவத்துக்கு இதுவரை 12 பேர் பலியாகி இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மேற்குவங்கத்தில் பள்ளிக் கட்டட்த்தின் கூரை ஒன்று பிய்த்துக் கொண்டு சென்ற வீடியோ வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

புயல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநிலத்தின் தெற்கு பகுதிகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. நாங்கள் அதிர்ச்சியில் உள்ளோம். புயல் சேத மதிப்புகளை கணக்கிட 3 முதல் 4 நாட்கள் ஆகலாம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "ஒருபுறம் கொரோனாவுடன் நாங்கள் போராடுகிறோம். மறுபுறம் புலம் பெயர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திரும்பி வருகிறார்கள். இவை அனைத்திற்கும் மேலாக தற்போது புயல். அம்பான் புயல் கொரோனாவை விட பேரழிவை ஏற்படுத்தும் என நான் நினைக்கிறேன். இச்சூழலில் அரசியல் செய்வதை விடுத்து, மத்திய அரசு எங்களுடன் ஒத்துழைப்பு தந்து, மக்களை காக்க வேண்டுகிறேன்." வேண்டுகோள் விடுத்துள்ளார்.