'துபாயிலிருந்து வந்தாரு'...'ஒரே காய்ச்சல்'...'ரொம்ப ட்ரை பண்ணியும் காப்பாற்ற முடியல'...அதிகரித்த பலி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Mar 24, 2020 01:44 PM

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. 65 வயது நபர் தற்போது கொரோனாவிற்கு பலியாகியுள்ளார்.

Mumbai : Coronavirus death toll rises to 10 in India

கொரோனாவின் பாதிப்பு தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கர்நாடகா, டெல்லி மற்றும் சில மாநிலங்களை சேர்ந்தவர்கள் உயிரிழந்த நிலையில் நேற்று 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக இருந்தது. இந்த சூழ்நிலையில் துபாயிலிருந்து திரும்பிய 65 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் மும்பை கஸ்தூரிபாய் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன்முலம் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரவில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு நோய் பாதிப்பு 101 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே தமிழகத்தை பொறுத்தவரை 144 தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : #CORONAVIRUS #DEATH TOLL #MUMBAI #LOCKDOWN