'குழந்தை பிறந்து 22 நாட்களிலேயே...' 'பணிக்கு திரும்பிய ஐ.ஏ.எஸ். அதிகாரி...' கர்ப்ப காலத்திலும் கடமையை செய்தவர்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுழந்தை பிறந்து 22 நாட்களேயான நிலையில் குழந்தையை வீட்டில் விட்டுக்கொண்டு இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனது கடமையை ஆற்ற பணிக்கு திரும்பியுள்ளார் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீஜனா.

தமிழகத்தில் நிலவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில், தன்னுடைய 9 மாத கர்ப்பகாலம் வரை அயராது உழைத்து வந்தவர் விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா ஐ.ஏ.எஸ்.
இந்த நிலையில் கடந்த மாதம் அவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 22 நாட்கள் கழிந்த நிலையில் இன்று தனது பணிக்கு திரும்பியுள்ளார். தற்போது தமிழகத்தில் நிலவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் பல துறைகளில் உள்ள ஊழியர்கள் இரவு பகல் பாராது உழைத்து வருகின்றனர்.
இவர்களில் ஒருவராக ஸ்ரீஜனா ஐ.ஏ.எஸ். அதிகாரியும் அலுவலகத்திலேயே இருந்து மற்ற அதிகாரிகளுக்கு ஊரடங்கு நிலையில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும் வகையில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
மேலும் குழந்தை வீட்டில் இருக்கும் தனது அத்தையும், கணவரும் கவனித்துக் கொள்வதாகவும், குழந்தைக்கு பால் ஊட்டுவதகாக மட்டும் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வீட்டுக்கு சென்றுவிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார் ஸ்ரீஜனா.
இதுபோல தன்னலமற்று, அயராது உழைக்கும் அரசு ஊழியர்களுக்கும், சுகாதார துறை ஊழியர்களுக்கும், மருத்துவ துறையினருக்கும், ஏழைமக்களுக்கு உதவும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாம் அனைவரும் வீட்டில் இருந்து கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும்.
குறிப்பு : தனித்திருப்போம். கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்போம்.
