ஊரடங்கு விஷயத்தில் 'இந்த' முறையைத்தான்... 'மத்திய அரசு' பின்பற்ற உள்ளதா?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Apr 12, 2020 11:49 PM

இந்தியா முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு வருகின்ற ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடிவுக்கு வரவிருக்கிறது. கொரோனா தற்போது இந்தியாவில் பரவும் விதம் அதிகமாக இருப்பதால் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Lockdown Extension: Central Government plans Red, Orange, Green Zones

இந்த நிலையில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை ஆகிய வண்ணங்களை வைத்து கொரோனா பாதித்த பகுதிகளை மூன்றாக பிரித்து ஊரடங்கை நீட்டிக்கலாம் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பச்சை மண்டலம்

பச்சை மண்டலம் என்றால் கொரோனாவால் பாதிக்கப்படாத பகுதிகள். நாடு முழுவதும் 400 மாவட்டங்கள் இந்த பிரிவின் கீழ் வரும். இந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான துறைகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடும்.

ஆரஞ்சு மண்டலம்

ஆரஞ்ச் மண்டலம் என்பது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15-க்கும் குறைவாக உள்ள மாவட்டங்கள். இங்கு இதற்கு மேல் கொரோனா பரவாது என்று கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் குறிப்பிட்ட அளவிலான பொதுமக்களுக்கான போக்குவரத்து, அறுவடைகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடும.

சிவப்பு மண்டலம்

15 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிவப்பு மண்டலமாக கருப்படுகிறது. இந்த இடங்களில் எந்தவிதமான செயலுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்காது. இதுபோல வண்ணங்களின் அடிப்படையில் ஊரடங்கை நீட்டிக்கலாம் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல நாடு முழுவதும் விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.