காத்துவாக்குல 2 காதல்.. ஒரே நேரத்துல 2 பெண்களை கரம் பிடித்த வாலிபர்.. மனுஷன் செஞ்ச பிளான் தான்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Mar 10, 2023 01:15 PM

தெலுங்கானாவில் இரண்டு பெண்களை காதலித்து வந்த வாலிபர் இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்திருக்கிறார். இது அந்த மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Telangana man married 2 living partners at the same time

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "தேவை இருக்கும் வரை தான் அவங்க விஸ்வாசம் எல்லாம்".. ப்ரித்வி ஷா-வின் திடீர் பதிவு.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

காதல்

தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் உள்ளது எர்ரபோரு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சத்தி பாபு. பழங்குடி இனத்தை சேர்ந்த இவர் அதே பகுதியை ஸ்வப்னா மற்றும் சுனிதா ஆகிய இரண்டு பெண்களை காதலித்து வந்திருக்கிறார். இந்த இரு பெண்களுமே வெவ்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள். சத்தி பாபுவின் காதலை ஏற்றுக்கொண்ட இரு பெண்களும் அவருடன் வசிக்க சம்மதித்திருக்கின்றனர்.

லிவிங் டுகெதர்

இதனையடுத்து ஸ்வப்னா மற்றும் சுனிதா ஆகியோருடன் திருமணம் செய்துகொள்ளாமலேயே லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்திருக்கிறார் சத்தி பாபு. ஆரம்பத்தில் சுனிதா மற்றும் ஸ்வப்னா ஆகியாரது வீட்டில் இதுகுறித்து வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் சத்தி பாபு அவர்களை சமாதானப்படுத்தி இருக்கிறார். கடந்த 3 வருடங்களாக லிவிங் டுகெதர் முறையில் மூன்று வரும் வசித்து வந்திருக்கின்றனர். இதனிடையே ஸ்வப்னா மற்றும் சுனிதா ஆகியோருக்கு குழந்தையும் பிறந்திருக்கிறது.

Telangana man married 2 living partners at the same time

Images are subject to © copyright to their respective owners.

திருமணம்

இந்த சூழ்நிலையில், கிராமத்தினர் முன்னிலையில் தனது காதலிகளை கரம் பிடிக்க நினைத்திருக்கிறார் சத்தி பாபு. இதனை தொடர்ந்து, இரு பெண்களின் வீட்டில் பேசி இருக்கிறார் அவர். இதன் பலனாக திருமண ஏற்பாடுகள் தடபுடலாக மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. திருமண பத்திரிகையில் இரண்டு மணமகள்களின் பெயரும் இடம் பெற்று இருந்திருக்கிறது. நேற்று காலை (வியாழக்கிழமை) நடைபெற்ற இந்த திருமணத்தில் உறவினர்கள், கிராமத்தினர் திரளாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கின்றனர்.

Telangana man married 2 living partners at the same time

Images are subject to © copyright to their respective owners.

பதற்றம்

திருமணம் மூவரின் வீட்டினரின் சம்மதத்துடன் நடைபெற்றாலும் ஏதேனும் சிக்கல் வருமோ என குடும்பத்தினர் அச்சமடைந்திருக்கின்றனர். இருப்பினும், திருமணம் கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணம் குறித்து மொத்த தெலுங்கானா மாநிலமும் பரபரப்புடன் பேசி வருகிறது.

Also Read | காதலியை கரம் பிடித்த பிரபல RCB வீரர்.. வாழ்த்தும் கிரிக்கெட் பிரபலங்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்

Tags : #TELANGANA #MAN #MARRIED #PARTNERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Telangana man married 2 living partners at the same time | India News.