தனது காதலிக்கு மெசேஜ் செய்து.. தொல்லை கொடுத்த நண்பனை கொன்று.. "இதயத்தை வெளியே எடுத்து".. குலைநடுங்க வைத்த இளைஞர்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவராக இருந்தவர் நவீன். இவரும் அதே கல்லூரியில், ஒரே சிவகுப்பில் பயின்று வரும் ஹரிஹர கிருஷ்ணா என்ற மாணவனும் நண்பர்கள் ஆவார்.

Images are subject to © copyright to their respective owners.
இதனிடையே அதே கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை நவீன் மற்றும் கிருஷ்ணா ஆகிய இருவருமே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது நவீனின் காதலை அந்த மாணவி ஏற்றுக்கொண்ட சூழலில் இருவரும் சுமார் இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
தொடர்ந்து வெகு நாட்கள் கழித்து அந்த மாணவியிடம் ஹரிஹர கிருஷ்ணா காதலை வெளிப்படுத்த அவர்கள் இருவருக்கும் இடையே காதல் உருவானதாக சொல்லப்படுகிறது.
அதே வேளையில், தன்னை விட்டு காதலி பிரிந்து சென்ற போதும் அவருக்கு தொடர்ந்து செல்போனில் கால் செய்தும், மெசேஜ் அனுப்பியும் தொல்லை கொடுத்து வந்துள்ளார் நவீன். இதுபற்றி அந்த மாணவி தனது காதலன் ஹரிஹர கிருஷ்ணாவிடம் சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த கிருஷ்ணா தனது காதலிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நண்பன் நவீனை கொலை செய்யவும் முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது.
மூன்று மாதங்கள் திட்டம் போட்டு வந்த அவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு நவீனை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். மேலும் கல்லூரி விடுதியில் தானே விட்டு விடுவதாக கூறி பைக்கில் நவீனை அழைத்துச் சென்றுள்ளார் ஹரிஹர கிருஷ்ணா. அப்படி இருக்க செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து இருவரும் மது அருந்தி உள்ள சூழலில், அப்போது காதலி பெயரில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவானதாகவும் சொல்லப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய தருணத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு நவீனை கொடூரமாக தாக்கியுள்ளார் கிருஷ்ணா.
அவரை கொலை செய்ததுடன் மட்டுமில்லாமல் நவீனின் தலையை துண்டித்து, உடலை இரண்டாக வெட்டி இதயத்தையும் ஹரிஹர கிருஷ்ணா வெளியே எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இப்படி மிக கொடூரமான முறையில் நண்பனை கொலை செய்த ஹரிஹர கிருஷ்ணாவை புகைப்படம் எடுத்து காதலிக்கு அனுப்பி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து பைக்கில் புறப்பட்டு சென்ற ஹரிஹர கிருஷ்ணா, பல தினங்கள் கழித்து போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார். காதல் விவகாரத்தில் நண்பனை கொடூரமாக கொலை செய்து இதயத்தை வெளியே எடுத்த இளைஞர் குறித்த செய்தி, பேரதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.
Also Read | "நான் பட்டபாடு இருக்கே".. குடி பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டர்.. பலரையும் கவர்ந்த சம்பவம்!!

மற்ற செய்திகள்
