"25 வருஷமா சம்பளம் இல்லாம வேலை பார்த்திருக்கேன்".. கணவன் மீது வழக்கு தொடர்ந்த மனைவி.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதில் அந்த பெண்மணி வைத்த வாதங்கள் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.
மகளிர் தினம்
ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 ஆம் தேதி அன்று, "சர்வதேச மகளிர் தினம்" உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தவும், பெண்களுக்கான உரிமைகள் கிடைத்திட வேண்டும் என்பதை நிலைநாட்டவும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஒருபக்கம் இருந்தாலும் பெண்களுக்கான உரிமைகள் இல்லங்களிலும் பொது வெளியிலும் தொடர்ந்து மறுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. வீட்டு வேலைகளா? குழந்தைகளை பராமரிப்பதா? அவை அனைத்தும் பெண்களுக்கே உரிய வேலை போல பல ஆண்களும் கருதுகின்றனர். இந்த எண்ணத்தின் மீது சம்மட்டி அடியாக இறங்கியிருக்கிறது ஸ்பெயின் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்று.
சம்பளம் இல்லாமல் வேலை
ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் இவானா மாரல். இவருக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் விவாகரத்து கோரி இவானா நீதிமன்றத்தை நாடினார். அப்போது கடந்த 25 ஆண்டுகளாக வீட்டையும் கவனித்துக்கொண்டு குழந்தைகளையும் பராமரித்து வந்ததாகவும் எந்த வேலையையும் கணவர் செய்ய மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
பணிப்பெண் போல, ஊதியமே பெறாமல் இத்தனை வேலைகளையும் செய்து மன உளைச்சலுக்கு ஆளானதாக இவனா நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது.
நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
இவனா தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி இத்தனை ஆண்டுகளாக ஊதியம் பெறாமல் இவ்வளவு வேலைகளையும் பார்க்க வைத்தது கொடுமையானது என தெரிவித்திருக்கின்றார். மேலும், இவானாவிற்கு ஜீவனாம்ச தொகையாக 1.82 லட்சம் யூரோ தொகையை கணவன் வழங்கிட வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த தம்பதிக்கு 20 மற்றும் 14 வயதில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு மாதாமாதம் 356 யூரோ மற்றும் 533 யூரோக்களை வழங்க வேண்டும் எனவும், இத்தனை ஆண்டுகளாக இவானா பணம் ஏதும் பெறாமல் பணிபுரிந்து வந்ததால் அவருக்கு மாதாமாதம் குறைந்தபட்ச பென்ஷன் தொகையை கருத்தில் கொண்டு 444 யூரோ தொகையை கணவன் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

மற்ற செய்திகள்
