துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து 11 நாள் கழிச்சு மீட்கப்பட்ட நபர்.. வந்ததும் தெரியவந்த நெகிழ்ச்சி தகவல்!!
முகப்பு > செய்திகள் > உலகம்மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | பாத்ரூம்ல கண்ணீர் விட்டு அழுத தினேஷ் கார்த்திக்..!? KL ராகுல் பற்றி பேசும்போது உருக்கம்..
இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் அந்நாடே ஸ்தம்பித்துப் போனது. அந்த நாட்டில் மீட்புப் பணிகள் தொடர்ந்து பல நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் 35000 ஐ கடந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றது.
மேலும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு உதவி செய்ய பல நாடுகளும் முன்வந்துள்ளன. தொடர்ந்து வேகமாக மீட்புப்பணிகளும் நடைபெற்று வரும் சூழலில், அவ்வப்போது இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பல நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட நபர்கள் குறித்து நிறைய உருக்கமான தகவல்களும் இணையத்தில் அதிகம் வெளியாகியும் வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
துருக்கியில் நடந்த நிலநடுக்கத்தில் 33 வயதாகும் Mustafa Avci என்ற நபர் இடிபாடுகளில் சிக்கித் தவித்துள்ளார். இந்த நிலையில், சுமார் 11 நாட்கள் கழித்து இடிபாடுகளுக்கு நடுவே சிக்கி இருந்த முஸ்தபாவை மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
நிலநடுக்கம் நிகழ சில மணி நேரம் இருக்கும் போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முஸ்தபாவின் மனைவி, பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இதன் பின்னர், நிலநடுக்கம் காரணமாக அனைவரும் இடிபாடுகளில் சிக்க சுமார் 11 நாட்கள் கழித்து முஸ்தபா மீட்கப்பட்டுள்ளார். அப்படி இருக்கையில், சமீபத்தில் பிறந்த தனது மகளை முதல் முறையாக 11 நாட்கள் கழித்து முஸ்தபா பார்த்த நிகழ்வு பலரை கண்கலங்க வைக்கவும் செய்திருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
அதே போல, தான் மீட்கப்பட்டதும் உடனடியாக தனக்கு ஞாபகம் இருந்த உறவினர் ஒருவரின் நபருக்கு அழைத்த முஸ்தபா, தனது குடும்பத்தினர் அனைவரும் நலமாக இருக்கிறார்களா என கேட்டு தெரிந்து கொண்டார். அவர்கள் அனைவரும் நலமாக இருப்பது பற்றி அறிந்து கொண்ட சூழலில் இது தொடர்பான வீடியோவும் பலரையும் மனம் உடைய வைக்கும் வகையிலும் அமைந்திருந்தது. 11 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட நபர், தனது குடும்பத்தினருக்கு போன் செய்த விஷயமும், பிறந்த மகளை முதல் முறையாக பார்த்த சம்பவமும் அதிக வைரலாகியும் வருகிறது.
Hatay’da enkaz altından 261’inci saatte, bu gece kurtarılan Mustafa, tıbbi müdahalenin ardından ilk olarak, telefon numarasını hatırladığı bir yakınını aradı. Kardeşimiz Mustafa’yı bu kadar iyi görmekten çok mutluyuz. pic.twitter.com/t0jrmH0M6r
— Dr. Fahrettin Koca (@drfahrettinkoca) February 16, 2023