முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. அதிகாரிகள் முன்னிலையில் காதலியை கரம்பிடித்த 75 வயது முதியவர்.. நெகிழ்ச்சி பின்னணி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Mar 02, 2023 05:49 PM

மஹாராஷ்டிரா மாநிலத்தில் 75 வயதான முதியவர் ஒருவர் முதியோர் இல்லத்தில் 70 வயதான பெண்ணை காதலித்து திருமணமும் செய்திருக்கிறார். இவர்களுடைய காதல் கதை பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

Maharashtra man meets the love of his life at an old age home

Images are subject to © copyright to their respective owners.

காதல்

பொதுவாக ஒவ்வொருவருக்கும் வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் காதல் வருவதுண்டு. சிலருக்கு 20 வயதிலும் சிலருக்கு 60 வயதிலும் காதல் ஏற்படக்கூடும். அதனை வெளிப்படுத்த தெரிந்தவர்கள் மட்டுமே மகிழ்ச்சியான வாழ்க்கையை நோக்கி நம்பிக்கையுடன் நடை போட துவங்குகின்றனர். காதலுக்கும் வயதுக்கும் சம்பந்தமே கிடையாது என பல பேர் சொல்லி கேள்விப்பட்டிருந்தாலும் அதனை உண்மை என மீண்டும் நிரூபித்து இருக்கிறார்கள் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு தம்பதியர். இவர்களது காதல் கதை பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

முதியோர் இல்லம்

சொந்த பந்தங்களால் கைவிடப்பட்டு வாழ்க்கைக்கு துணையாக இருந்தவர்களின் விடைபெறுதலுக்கு பிறகு பெரும்பாலானோர் செல்லக்கூடிய இடமாக முதியோர் இல்லம் இருக்கிறது. அங்கு இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் பல சோக பின்னணி இருப்பதுண்டு. அப்படியானவர்களில் ஒருவர் தான் பாபு ராவ் பாட்டீல். 75 வயதான இவர் கடந்த சில வருடங்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜானகி முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார்.

Maharashtra man meets the love of his life at an old age home

Images are subject to © copyright to their respective owners.

கோல்ஹாபூர் பகுதியில் இயங்கி வரும் இந்த முதியோர் இல்லத்தில் அனுசியா ஷிண்டே எனும் 70 வயதான பெண்மணி ஒருவரும் வசித்து வந்திருக்கிறார். ஆரம்பத்தில் இருவரும் சகஜமாக பேசிக் கொள்ள துவங்கியிருக்கின்றனர். நாளடைவில் இது நெருக்கமான நட்பாக மாறி இருக்கிறது. தனது மனைவியின் மரணத்திற்குப் பிறகு பாபு ராவ் இந்த முதியோர் இல்லத்திற்கு வந்திருக்கிறார். அதேபோல அனுஷியாவும் தனது கணவரின் மரணத்திற்கு பிறகு இந்த முதியோர் இல்லத்தில் சேர்ந்துள்ளார்.

Maharashtra man meets the love of his life at an old age home

Images are subject to © copyright to their respective owners.

திருமணம்

ஒருவருக்கு ஒருவர் அன்பாக பழகி வந்த நிலையில் பாபு ராவ் சமீபத்தில் தனது காதலை அனுசியாவிடம் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆரம்பத்தில் அனுசுயா அவரது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் எட்டு தினங்கள் கழித்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார் அனுசியா. இதனை தொடர்ந்து அந்த முதியோர் இல்ல அதிகாரிகளிடத்தில் இதுகுறித்து பேசியுள்ளார் பாபுராவ்.

Maharashtra man meets the love of his life at an old age home

Images are subject to © copyright to their respective owners.

இதனை அடுத்து இந்து முறைப்படி ஜானகி ஆசிரமத்தில் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அந்த முதியோர் இல்லத்தில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களின் முன்னிலையில் இவர்களது திருமணம் எளிமையாக நடத்தப்பட்டிருக்கிறது. மணமக்களாக இருவரும் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியும் வருகின்றன. இந்த நிலையில் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags : #MAHARASHTRA #MAN #LOVER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Maharashtra man meets the love of his life at an old age home | India News.