"என் மனைவியும், உங்கள் கணவரும் திருமணம் செஞ்சுகிட்டாங்க".. பாதிக்கப்பட்ட கணவன் & மனைவி எடுத்த பரபரப்பு முடிவு
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகாரின் ககாரியா என்னும் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஹர்தியா என்ற கிராமம். அங்கே நீரஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ரூபி தேவி என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணமாகி உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.
மேலும் இந்த தம்பதிக்கு 4 குழந்தைகளும் உள்ளனர். நீரஜ் மற்றும் ரூபி தேவி ஆகியோரின் திருமண வாழ்க்கையும் மிகச் சிறப்பாக சென்று கொண்டிருந்த சூழலில், ரூபி தேவி, முகேஷ் என்ற ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நபரை கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தன்னுடைய நான்கு குழந்தைகளில் மூன்று பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ரூபி தேவி முகேஷை திருமணம் செய்து அவருடன் வாழ ஆரம்பித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஒரு குழந்தையை வளர்க்கும் நீரஜ், தனது மனைவி மற்றும் முகேஷ் மீது போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்தார். இதற்காக கிராம பஞ்சாயத்து நடத்தப்பட்ட சூழலிலும் முகேஷ் அதற்கு ஒப்புக் கொள்ளாமல் ரூபி தேவியுடன் வாழ்ந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
Images are subject to © copyright to their respective owners.
இதனிடையே என்ன செய்வதென்று தெரியாமல் வேதனையில் இருந்து வந்த நிலையில் தான், முகேஷின் மனைவியும், நீரஜ்ஜும் தங்களுக்கு நடந்த இந்த துயரத்துக்கு தாங்களே தீர்வை தேடிக் கொள்ளும் வகையில் உள்ளூரில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் முகேஷின் மனைவி பெயரும் ரூபிதான்.!
Also Read | "தலைவர் மறைந்த போது அந்த வேதனையை விட"... வாழ்வில் மறக்க முடியாத தருணம்.. எமோஷனல் ஆன முதல்வர் MK Stalin!!

மற்ற செய்திகள்
