10 லட்சம் செலவு செய்து வருங்கால மனைவியை வெளிநாடு அனுப்பி வைத்த கணவன்.. வேறொருவரை திருமணம் செய்ததால் பரபரப்பு!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபஞ்சாப் மாநிலம், லாப்ரான் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ஹர்ப்ரீத் சிங். இவருக்கும் லூதியானா என்னும் பகுதியை சேர்ந்த ஹர்ப்ரீத் கவுர் என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Images are subject to © copyright to their respective owners.
கனடா போன வருங்கால மனைவி
இதனைத் தொடர்ந்து, திருமணத்திற்கு முன்பாக ஹர்ப்ரீத் கவுரை முதலில் கனடா அனுப்பவும் இரு குடும்பத்தினரும் சேர்ந்து முடிவு செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி, ஹர்ப்ரீத் கவுரை கனடாவிற்கு அனுப்பி வைத்துள்ள சூழலில், அதன் பின்னர் வருங்கால கணவர் ஹர்ப்ரீத் சிங்கை கனடாவிற்கு அழைத்து செல்லும் படியும் அவர்கள் திட்டம் போட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதற்காக ஹர்ப்ரீத் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர், கவுர் கனடா செல்வதற்காக சுமார் 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாக கூறப்படுகிறது.
Images are subject to © copyright to their respective owners.
ஆனால் கனடா சென்ற ஹர்ப்ரீத் கவுர், பின்னர் ஹர்ப்ரீத் சிங்குடன் பேசுவதை நிறுத்திக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், ஹர்ப்ரீத் சிங் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மற்றொரு அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. அதன்படி கனடாவில் வேறொரு நபரைத் திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் அந்த நபருடன் கவுர் வாழ்ந்து வருவதாகவும் தெரிய வர விஷயம் தெரிந்து நிலைகுலைந்து போய் உள்ளார் ஹர்ப்ரீத் சிங். தன்னுடன் நிச்சயமான பெண் தன்னிடம் இருந்து பணத்தை வாங்கி செலவு செய்து கனடா சென்ற பிறகு அங்கே வேறு ஒருவரை திருமணம் செய்ததை அறிந்து அதிர்ந்து போய் உள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
வேறொரு திருமணம்
இது தொடர்பாக, ஹர்ப்ரீத் சிங் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். ஆனால், சில தினங்களாக நடவடிக்கை எடுக்காமல் போலீசார் இருந்து வந்த சூழலில், அப்பகுதியில் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி ஒன்றின் மீது ஏறி அமர்ந்து கொண்ட ஹர்ப்ரீத் சிங், தக்க நடவடிக்கையை போலீசார் எடுப்பதாக உறுதி அளித்தால் தான் கீழே இறங்கி வருவதாகவும் ஹர்ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
இதனைத் தொடர்ந்து, சில மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் கீழே இறங்கி வர ஹர்ப்ரீத் கவுர் சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
