"தேவை இருக்கும் வரை தான் அவங்க விஸ்வாசம் எல்லாம்".. ப்ரித்வி ஷா-வின் திடீர் பதிவு.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Mar 10, 2023 09:45 AM

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ப்ரித்வி ஷாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கிரிக்கெட் வட்டாரத்தில் இது பேசுபொருளாகவும் உருவெடுத்துள்ளது.

Indian Cricketer Prithvi shaw instagram story makes fans confused

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | அயோத்தி படத்திற்காக அதிகரிக்கப்பட்ட திரையரங்குகள்.. இத்தனை தியேட்டர்களா! இயக்குனர் மந்திர மூர்த்தி EXCLUSIVE!

ப்ரித்வி ஷா

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனாக வலம் வருபவர் ப்ரித்வி ஷா. மிக இளம் வயதிலேயே முதல் தர கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை பிரித்வி படைத்திருந்தார். அறிமுகமான முதல் ரஞ்சி மற்றும் துலீப் கோப்பை போட்டியிலேயே சதமடித்து ஜாம்பவான் சச்சினின் சாதனையை முறியடித்தவர். அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தினார் பிரித்வி ஷா. அதில் இந்தியா கோப்பையையும் வென்றிருந்தது.

Images are subject to © copyright to their respective owners.

சோகம்

இதனையடுத்து இந்திய அணியில் வலுவான வீரராக பிரித்வி ஷா இருப்பார் என பரவலாக பேசப்பட்டது. இருப்பினும், அடுத்தடுத்து காயங்கள் ஏற்பட்ட நிலையில் இந்திய அணியில் அவர் தொடர்ந்து விளையாட முடியாத சூழ்நிலையே உள்ளது. ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் பிரித்வி ஷா ஓப்பனிங் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடக்கூடியவர். சமீபத்திய நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியில் பிரித்வி ஷா சேர்க்கப்பட்டிருந்தாலும் அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இது அவரது ரசிகர்களை சோகமடைய செய்திருந்தது.

Images are subject to © copyright to their respective owners.

ஸ்டோரி

இந்த சூழ்நிலையில் ப்ரித்வி ஷா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,"சிலர் உங்களை எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு மட்டுமே நேசிப்பார்கள். அவர்களுக்கான பலன்கள் நிறுத்தப்படும் நேரத்தில் அவர்களின் விசுவாசம் முடிவடைகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் கிரிக்கெட் வட்டாரத்தில் ப்ரித்வி ஷாவின் இந்த பதிவு பேசுபொருளாக மாறியுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

ஷா சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடந்த டெல்லி கேபிடல்ஸ் பயிற்சி முகாமில் பங்கேற்றார். இந்த சூழ்நிலையில் ப்ரித்வி ஷா இப்படியொரு பதிவை எழுதி இருப்பது கிரிக்கெட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | "எதிர்க்கட்சி அதிமுகவா? பாஜகவா?"... முதல்வர் MK ஸ்டாலின் சொன்ன பரபர பதில் இதுதான்!!.. Exclusive!!

Tags : #INDIAN CRICKETER #PRITHVI SHAW #PRITHVI SHAW INSTAGRAM STORY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Indian Cricketer Prithvi shaw instagram story makes fans confused | Sports News.