சாலையில் சென்றவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பாலிவுட் நடிகர் சன்னி தியோல்.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாசாலையில் சென்ற நபருக்கு பாலிவுட் நடிகர் சன்னி தியோல் சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | "நல்லவேளை அந்த பிச்-ல KL ராகுல் விளையாடல'.. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பரபரப்பு பேச்சு..!
சன்னி தியோல்
பாலிவுட் உலகில் பிரபல நடிகராக அறியப்படுபவர் சன்னி தியோல். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் தொகுதியில் இருந்து லோக்சபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் நடிப்பில் வெளியான கடார் திரைப்படத்தின் ப்ரீகுவல் தயாராகி வருகிறது. இதனையும் அனில் ஷர்மா இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த சூழ்நிலையில் சன்னி தியோல் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
வீடியோ
கடார் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் பங்குபெற்று வரும் சன்னி தியோல் இதற்காக அஹமத்நகர் பகுதியில் தற்போது பயணித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் சாலையில் நின்றிருந்த தியோல் அந்த பகுதி வழியாக மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றுகொண்டிருந்த நபரிடம் பேசுகிறார். அப்போது, வண்டியில் என்ன எடுத்துச் செல்கிறீர்கள்? என சன்னி கேட்க மாடுகளுக்கு தீவனம் எடுத்துச் செல்வதாக கூறுகிறார் அந்நபர். ஆனால் அவருக்கோ, சன்னியை அடையாளம் தெரியவில்லை. இதனையடுத்து சன்னி அந்த நபரை நெருங்கிச் சென்று பேசுகிறார்.
Images are subject to © copyright to their respective owners.
சர்ப்ரைஸ்
அப்போது அந்த நபர்,"உங்களை பார்க்க சன்னி தியோல் போலவே இருக்கிறீர்கள்" என சொல்ல, சன்னியும் சிரித்துக்கொண்டே,"நான் தான் அது" என்கிறார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த அந்த நபர், "கடவுளே நீங்களா?, உங்களுடைய மற்றும் உங்களது தந்தையின் வீடியோக்களை நான் பார்த்திருக்கிறேன்" என மகிழ்ச்சியுடன் கூறுகிறார். அப்போது சன்னி அவருடைய கைகளை பற்றியபடி பேசிக்கொண்டிருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, அஹமத்நகர் பகுதியில் கடார் படத்தின்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read | நாய் என நினைத்து அரியவகை கரடியை வீட்டில் வளர்த்து வந்த சீன குடும்பம்..!

மற்ற செய்திகள்
