வழுக்கையால் பறிபோன வேலை?.. ஷாக்ல இருந்த மனுஷனுக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டிய லட்ச ரூபாய்!!
முகப்பு > செய்திகள் > உலகம்வழுக்கை தலை பெயரில் ஊழியர் ஒருவருக்கு வேலை போன சூழலில், அதன் பின்னர் நடந்த சம்பவம் அதிகம் வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | முதல் டெஸ்ட்ல ஜடேஜா, 2 ஆவது Test -ல அஸ்வின்.. "ஒரே ஓவரில் மாயாஜாலம் செய்த சூழல்".. போட்டியையே மாத்திட்டாரே!!
இங்கிலாந்து நாட்டின் லீட்ஸ் என்னும் நகரில் பிரபல நெட்வொர்க் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக பிலிப் ஹெஸ்கெத் என்பவர் இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, வழுக்கை தலையுடன் இருக்கும் பிலிப், தனது நிறுவனத்தில் வழுக்கைத் தலையுடன் இருக்கும் 50 வயதுக்கு மேல் உள்ள நபர்களை மாற்றி விட்டு தலை நிறைய முடியுடன் இருக்கும் நபர்களை வேலைக்கு வைக்கவும் முடிவு செய்துள்ளார்.
தான் வழுக்கை தலையுடன் இருப்பதால், தன்னை போல இருக்கும் நபர்களையும் அலுவலகத்தில் பார்க்கும் போது அவர்களும் அப்படியே இருப்பதை விரும்பாமல், வயதான நபர்களை மாற்றி விட்டு இளம் நபர்களை வேலைக்கு சேர்த்து ஆற்றலை பெருக்கவும் முடிவு செய்திருந்தார். நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் அங்கே பணிபுரிந்து வந்த சுமார் 60 வயதை தாண்டிய மார்க் ஜோன்ஸ் என்பவர் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றது.
வழுக்கை தலையின் பெயரில் தனது வேலை பறி போனதால், ஒரு நிமிடம் அதிர்ந்து போயுள்ளார் ஜோன்ஸ். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்த சூழலில், தனது வேலை பறி போனது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் மார்க் ஜோன்ஸ் தொடர்ந்துள்ளார். தனது தலையில் முடி இருந்த போதும் தவறுதலாக வயதின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் மார்க் ஜோன்ஸ் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், இந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ள சூழலில், மார்க் ஜோன்ஸிற்கு நஷ்டஈடாக 71,441 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 71 லட்சம் ரூபாய்) வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழுக்கை தலையின் பெயரில் வேலை பறி போனதையடுத்து மார்க் ஜோன்ஸ் என்ற நபரை தேடி சுமார் 70 லட்சம் ரூபாய் நஷ்டஈடாக கைக்கு வந்து சேர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Also Read | "ஷமியா இப்டி ஒரு பால் போட்டது?".. ஒரு நிமிஷம் குழம்பி நின்ன கோலி, புஜாரா... என்ன நடந்துச்சு?

மற்ற செய்திகள்
