'அடியே அருந்ததி'... 'மரியாத இல்லாமலா பேசுற'...'புற மண்டையிலேயே பின்னிய மதர்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Sep 04, 2019 02:11 PM

டிக் டாக் செய்யும் போது தாயை மரியாதை இல்லாமல் பேசிய இளைஞரை, அவரது தாயே புரட்டி எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Young boy tried doing Tik Tok with his mother was beaten by her

இன்றைய இளசுகளுக்கு டிக் டாக் என்பது அவர்களது வாழ்கை சூழலோடு ஒன்றி விட்டது என்றே கூறலாம்.  இதனால் அவர்களது கவனம் சிதறுவதோடு, அவர்களது எதிர்காலத்திற்கும் இது கேடாக அமையும் என பலரும்  குற்றம் சாட்டினார்கள். இதனிடையே டிக் டாக் செயலி பல்வேறு விபத்துகளுக்கும், குற்ற சம்பவங்களுக்கும் காரணமாக அமைந்த நிலையில், பெண்கள் இதனால் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள் என்ற குற்றசாட்டு  எழுந்தது. இதனைத்தொடர்ந்து  கடந்த வருடம் டிக் டாக் செயலி இந்தியாவில் தடைசெய்யப்பட்டது.

இதையடுத்து தவறான வீடியோக்கள், ஆபாசமான வீடியோக்கள் செயலியில் இடம்பெறாது டிக் டாக் உறுதி அளித்த நிலையில் டிக் டாக் செயலி மீண்டும் அனுமதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் தாயாருடன் டிக் டாக் செய்ய நினைத்து அவரிடம் அடிவாங்கிய மகனின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருக்கும் இளைஞர் ''தனது தாயிடம் சென்று அடியே அருந்ததி என அவரது கூந்தலை பிடித்து இழுக்கிறார். அப்போது அவர் ''யாரை மரியாதை இல்லாமல் பேசுற'' என தலையிலேயே அடித்து துவைக்கிறார்.

அப்போது மகன் இது டயலாக் தான் என கூறுகிறார். டயலாக்னா மரியாதை இல்லாமல் பேசுவியா என மீண்டும் அடி விழுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டிக் டாக் என்ற பெயரில் இது போன்று செய்பவர்களுக்கு இது தேவை தான் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Tags : #TWITTER #TIK TOK #VIRAL #YOUNG BOY