'யார் இடத்துல வந்து, யார் சீன் போடுறது'?... 'திருடர்களை பங்கமா செஞ்ச சிறுவன்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇரண்டு திருடர்கள் பைக்கில் வேகமாக சென்ற நிலையில், அருகே இருந்த சிறுவன் ஒருவனின் சமயோஜித செயல் தற்போது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

ட்விட்டரில் நபர் ஒருவர் சிசிடிவி காட்சி ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், நபர் ஒருவர் கேஸ் சிலிண்டரை சைக்கிளில் வைத்துச் சென்று கொண்டிருந்தார். திடீரென, அவரது பின்னால் பைக்கில் வந்த இரண்டு பேர், அந்த நபரின் கையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு வேகமாக பைக்கில் பறந்தனர்.
மிகவும் குறுகிய சந்து என்பதால், ஆட்கள் நடமாட்டம் இருந்த போதிலும் அவர்கள் வேகமாக செல்ல, ஒரு கடையோராம் நின்ற சிறுவன் இது எதையும் கவனிக்காமல் நிற்பது போல நின்று கொண்டிருந்தார். திடீரென திருடர்களின் பைக் தனது அருகே வந்ததும், வேகமாக அந்த பைக்கைத் தள்ளி விட்டார். இதனால், தடுமாறிய திருடர்கள், தவறிக் கீழே விழுந்தனர்.
செம...திருடர்கள புடிச்சு தள்ளிவிடும் அந்த பையன் ...bravo...💪🙌😍 pic.twitter.com/sBwSUGN4MJ
— Shafeeq (@shafeeqkwt) January 27, 2021
இதனையடுத்து, பைக்கை அங்கே விட்டுவிட்டு திருடர்கள் தப்பிக்க முயன்றனர். அதில் ஒரு திருடன் வேகமாக தப்பித்துச் செல்ல, மீதமிருந்த ஒருவனை அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்து, பிடித்து வைத்து உதைத்தனர். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது.
சிறுவனின் சாமர்த்தியத்தால் திருடர்களை பிடித்த நிலையில், மிகவும் துணிச்சலாக செயல்பட்ட சிறுவனுக்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
