VIDEO : "'2020' ஆம் ஆண்டு ரொம்ப மோசமா போச்சு",,.. மெய்யாக்கும் வகையில் 'மறுநொடி'யே நடந்த 'மெர்சல்' சம்பவம்!!!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தாண்டு சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று, உலக நாடுகள் அனைத்தையும் கடந்த ஐந்து மாதங்களாக கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.
![US groom makes joke of year 2020 immediately lightning strikes US groom makes joke of year 2020 immediately lightning strikes](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/us-groom-makes-joke-of-year-2020-immediately-lightning-strikes.jpg)
லெபனான் நகரில் நடந்த வெடி விபத்து உட்பட மேலும் பல பேரிடர்களும் 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இதனால் 2020 ஐ மிகவும் மோசமான ஆண்டாக கூறி பல மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் என்னும் பகுதியில் வெளிப்புறத்தில் வைத்து திருமண விழா ஒன்று நிகழ்ந்துள்ளது. அப்போது பேசிய மணமகன், 'எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வோம். 2020 ஆம் ஆண்டு இதுவரை சிறந்த ஆண்டாக இருக்கவில்லை' என தெரிவித்தார். அப்போது அங்கிருந்தவர்கள் சிரித்த நிலையில், மணமகன் சொன்னதை மெய்யாக்கும் வகையில், அங்கு மின்னலுடன் சேர்ந்து இடி இடித்தது. உடனே மணமகன், தான் கூறியது போல இருப்பதாக கை காட்டினார்.
இது தொடர்பான வீடியோ ஒன்று இணையதளங்களில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், பலர் மிகவும் சரியான டைமிங் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ஒருவர், 'உங்களது திருமணத்திற்காக தோர் (thor) வாழ்த்து தெரிவித்துள்ளார்' எனவும் நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)