‘குடி போதையில்’ கார் ஓட்டிச் சென்ற இளம் பெண் செய்த ‘வேடிக்கையான’ காரியம்.. பரவி வரும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்பெயினின் மாலாகா பகுதியில், தனது காரை பெண் ஒருவர் குடிபோதையில், ரயில் தடங்களில் ஒன்றரை கி.மீ தூரத்திற்கு ஒட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகி, தற்போது ஆன்லைனில் வைரலாகி வருகிறது.

ஸ்பெயின் நாட்டின் மலாகா பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. அந்த சுரங்கப்பாதையில் கார் ஒன்று மாட்டிக்கொண்டிருப்பதை, மெட்ரோ ரயில் நிலைய பாதுகாப்பு ஊழியர்கள் கவனித்துள்ளனர். உடனடியாக அவர்கள் காவல்துறைக்கு இதுக்குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின், அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த காரை மீட்டனர். 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காரை ஓட்டி வந்திருப்பதும், அவர் குடிபோதையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவருடைய ரத்தத்தில் அனுமதிக்கப்படும் ஆல்கஹால் அளவைவிட 3 மடங்கு அதிகமான இருப்பது ஆல்கஹால் தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் அப்பெண்ணை கைது செய்துள்ளனர். குடித்துவிட்டு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் என்ற பிரிவின் கீழ், காவல்துறையினர் அந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுரங்கப்பாதையில் அவருடைய கார் சிக்கியதன் காரணமாக ரயில் சேவை இரண்டு மணி நேரத்துக்கு பாதிக்கப்பட்டது.

மற்ற செய்திகள்
