VIDEO : "என் மனசு எவ்ளோ பாடுபடும்?"... "என் 'ஆத்மா' உன்னையும் உன் குடும்பத்தையும் சும்மா விடாது" - 'எஸ்.ஜ'-க்கு 'வீடியோ' பதிவிட்டு சிவனடியார் எடுத்த 'அதிர்ச்சி' முடிவு!!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் மாவட்டம் இடைப்பாடி பகுதியை அடுத்த குண்டாங்கல்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
சரவணன் அப்பகுதியில் மந்திரவாதியாக உள்ள நிலையில், பல விசேஷ பூஜைகளையும் செய்து வந்துள்ளார். காவி வேட்டி, அதிக தாடியுடன் காணப்படும் சரவணனிடம் நோய்கள் குணமாக வேண்டி, பல பகுதிகளிலுள்ள மக்கள் நாள்தோறும் அவரை கண்டு செல்கின்றனர். அவர்களுக்கு சரவணன் மந்திரித்த தாயத்து கயிறுகளையும் வழங்குவார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சிவனடியார் சரவணனை தேடி சில பெண்கள் வந்துள்ளனர். அவர்களுக்காக சரவணன் பூஜை செய்து கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த போலீசார்கள் சிலர், சரவணன் அரை நிர்வாணத்தில் இருந்ததாக கூறி, அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், சரவணனின் குழந்தைகள் முன்பே போலீசார் அடித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நடந்த மறுநாள் முதல் சிவனடியார் சரவணனை காணவில்லை. தொடர்ந்து சரவணனை தேடி வந்த போது, அவர் தனது நண்பர்களின் எண்ணிற்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த வீடியோவில், அதிக கோபத்துடன் பேசும் சரவணன், 'தன்னுடைய முடிவுக்கு காரணம், அந்த எஸ்.ஐ தான் என்றும், அவர் அடித்ததால் நான் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன்' என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய ஆத்மா, எஸ்.ஐ மற்றும் அவரது குடும்பத்தினரை சும்மா விடாது என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த அவரது நண்பர்கள், அவரைத் தொடர்ந்து தேடி வந்த நிலையில், சரவணனின் வீட்டிற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் பாறைகளுக்கு நடுவே அழுகிய நிலையில் அவரது சடலம் கிடந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சரவணன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலானது. சிவனடியார் சரவணனின் தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என பலர் ட்விட்டர்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
A shocking incident in #TamilNadu! Another #sadhu , lord shiva devotee committed suicide after severely humiliated & beaten up police ASI Antony Michael 😣 MSM tight lipped But why?#JusticeForSaravanan#JusticeForSadhus Trending in #India
.#GaneshChaturthi #VinayagarChaturthi pic.twitter.com/KXfoxxNUYE
— News Line IFE 🌈Live📡 (@NewsLineIFE) August 22, 2020