"உங்களுக்கு ஒரு பெரிய 'சல்யூட்' போங்க..." மூன்றே மாசத்தில் அசாத்திய செயல் செய்து காட்டிய பெண் 'காவலர்',.. குவியும் 'பாராட்டு'க்கள்!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் குழந்தைகள் அதிகம் காணாமல் போனது தொடர்பான வழக்குகள் அதிகரித்து வந்த நிலையில், அதனை குறைக்க வேண்டி காவல்துறை ஒரு ஊக்கத்திட்டத்தை அறிவித்திருந்தது.

அதன்படி, டெல்லி காவல் நிலையத்தில் பணிபுரியும் கான்ஸ்டபிள்கள் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள்கள் ஒரு வ்ருடத்திற்குள் காணாமல் போன 50 குழந்தைகளை கண்டுபிடித்தால் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், டெல்லியின் சமாய்பூர் பதவி காவல்நிலைய பெண் தலைமை கான்ஸ்டபிள் சீமா டாக்கா, 3 மாதங்களில் காணாமல் போன 76 குழந்தைகளை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். அவர் மீட்டெடுத்த குழந்தைகளில் 56 பேர் 7 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள். இதன் காரணமாக, சீமா டாக்காவுக்கு டெல்லி மாநகர காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தா பதவி உயர்வு வழங்கினார்.
3 மாதங்களில் 76 குழந்தைகளை கண்டுபிடித்ததற்காக அவுட் ஆஃப் டர்ன் மூலம் பதவி உயர்வு பெற்ற முதல் காவலர் என்ற பெருமையை சீமா டாக்கா பெற்றுள்ளார். மூன்றே மாதங்களில் பெண் காவலர் செய்த சாதனையை பல உயர் அதிகாரிகளும், பொது மக்களும் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
